-

30 ஆக., 2013


இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை திட்டமிட்ட ரீதியில் செயற்பட்டு வருகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச தெரிவித்துள்ளார்.

 
இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்திக்கிறார்.
 
இவ்வாறானதொரு நிலையில், மூன்று நாள் பயணமாக கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸூக்குச் சென்ற ஜனாதிபதி, அந்த நாட்டு அதிபர் அலெக்சாண்டரிடம் மேற்கண்டவாறு தெரிவித்ததாக அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை பெலாரஸூக்குப் பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அங்கு வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
"இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபை திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றது. குறிப்பிட்ட சில நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையை இலங்கை பெலாரஸ் போன்ற நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தி வருகின்றன என ஜனாதிபதி மஹிந்த அங்கு குறிப்பிட்டதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கை மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=127712266630353909#sthash.rLcEJQGF.dpuf

ad

ad