-

4 ஆக., 2013

நம்மவர்கள் அனைவராலும் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட கென் கிருபா ஸ்காபுறோ கில்ட்வூட்டில் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தத் தொகுதி நீண்ட காலமாகவே லிபரல் கட்சியின் பிடியில் இருந்த தொகுதி என்பது முதல் காரணம். இரண்டாவது படகுகளில் வந்த அகதி மக்களை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பியனுப்பிய விவகாரங்களிலும் வேறு சில சர்ச்சைகளினாலும் கோன்செர்வேற்றிவ் கட்சி தமிழர்களுக்கு எதிரானது என்ற எண்ணமே மக்கள் மனங்களில் வேரூன்றியுள்ளது.

ஸ்காபுறோ கில்ட்வூட்டில் கென் கிருபா வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது ஏன் !! (காணொளி )

மூன்றாவதாக நம் மக்களில் பலருக்கு தங்கள் பகுதியில் நடக்கும் தேர்தல் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் போதிய விழிப்புணர்வு இல்லாமையும் தான். வேடிக்கையாக சொல்ல வேண்டுமானால் நம்மவர்கள் பலர் எந்த தொகுதியில் வசிக்கிறோம் என்பது கூட தெரியாத நிலையிலேயே இன்னமும் உள்ளனர். மற்றும் கனடிய தமிழ் பொது அமைப்புக்களினதும் தமிழ் ஊடகங்களினதும் போதியளவு ஆதரவு போதாமையும் பிரதான காரணங்களாகும்

இருப்பினும் இந்த முறை ஸ்காபுறோ தேர்தலின் போது பலர் ஆர்வமுடன் வந்து வாக்களித்தது காணக் கூடியதாய் இருந்தது. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும், அதற்கு உறுதுணையாய் இருந்து தேர்தல் பணியாற்றியோருக்கும் கென் கிருபா உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ken_kirupa_result

ad

ad