புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2013

வடமாகாண தேர்தலில் யாழில் போட்டியிடவுள்ள சுயேட்சை வேட்பாளர் அடித்துக் கொலை!- சுயேட்சைக் குழுக்களுக்கு சின்னங்கள் அறிவிப்பு
வடமாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் யாழில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை காலை யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் எஸ். இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்று சனிக்கிழமை கலை மீட்கப்பட்டுள்ளார் என யாழ்.சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் சுன்னாகம், ஸ்டேசன் வீதியில் சிறிய கோயில் ஒன்றில் இருந்தே இவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் வடமாகாண சபைத் தேர்தல் ஆரம்பிக்கப்பட்டு யாழ்.மாவட்டத்தில் முதல் உயிர் கொலை செய்யப்பட்டுள்ளது.
வன்முறைச் சம்பவங்களில் இரண்டாவது வன்முறைச் சம்பவம் என யாழ்.பொலிஸ் தலமையகம் குறிப்பிட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கு சின்னங்கள் அறிவிப்பு
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன. இம்முறை 9 சுயேட்சைக் குழுக்கள் யாழ். மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்கியுள்ளன. அவற்றின் சின்னங்கள் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரினால் வழங்கப்பட்டன.
அச்சின்னங்களின் விபரம் வருமாறு,
அன்ரன் ரங்கதுசார தலைமையிலான சுயேட்சைக் குழு - 01 - பந்து சின்னத்திலும்,
இராஜலிங்கம் மிதுன்ராஜ் தலைமையிலான சுயேட்சைக் குழு - 02 - இரட்டைக்கொடிச் சின்னத்திலும்,
நல்லைநாதன் திருலோக நாதன் தலைமையிலான சுயேட்சைக்குழு - 03 - தபால்பெட்டி சின்னத்திலும்,
பொன்மதிமுக ராஜா விஜயகாந் தலைமையில் சுயேட்சைக்குழு - 04 - நாகபாம்பு சின்னத்திலும்,
ஜமீன் மொக மட் முஜையித் தலைமையிலான சுயேட்சைக்குழு - 05 - கூடாரம் சின்னத்திலும்,
மாணிக்கஜோதி அபிமன்னசிங்கம் தலைமையிலான சுயேட்சைக் குழு - 06 - சுத்தியல் சின்னத்திலும்,
இராசரத்தினம் ஸ்ரீதா மோதரராஜா தலைமையிலான சுயேட்சைக் குழு - 07 ஆமைப் பூட்டுச்சின்னத்திலும்,
கிருஷ்ணசாமி பாஸ்கரன் தலைமையிலான சுயேட்சைக்குழு - 08 - ஜம்புக்காய் சின்னத்திலும்,
தம்பிப்பிள்ளை இருதயராணி தலைமையிலான சுயேட்சைக் குழு - 09 - புறா சின்னத்திலும் போட்டியிடும் என யாழ்.மாவட்ட உதவி தேர்தல் தெரிவத்தாட்சிப் அலுவலர் தெரிவித்தார்.

ad

ad