புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2013






          ""ஹலோ தலைவரே... கோட்டை  வட்டாரத்திலிருந்து ஒரு தகவல். போன வாரமே உங்ககிட்டே சொல்லணும்னு நினைத்தேன். மறந்து மறந்து போயிடுது.''

""இப்பவாவது மறக்காம சொல்லுப்பா..
என்ன தகவல்?''nakeeran thx

""தமிழக அரசாங்கத்தின் உள்துறையின் கீழ் வருவது குற்ற வழக்கு தொடர்வுத்துறை. இதன் இயக்குநர் பதவி கடந்த 3 வருடமா காலியாகவே கிடந்தது. இது சம்பந்தமா போடப்பட்ட பொதுநல வழக்கில் கோர்ட் உத்தரவிட்டபடி, சீனியாரிட்டி அடிப்படையில் தமிழ்ச்செல்வனை இயக்குநராக நியமித்தார் ஜெ. இந்தத் தமிழ்ச்செல்வனோட அதிகாரத்தில் நடக்கும் ஏ.பி.பி. போஸ்ட்டிங்குகளில் நேர்மைங்கிறது மருந்துக்குக்கூட கடைப் பிடிக்கப்படுவதில்லைன்னு பாதிக்கப்பட்டவங்க சொல்றாங்க.''

""அப்படியென்ன நடக்குதாம்?''

""அரசு உதவி வழக்கறிஞர்கள் 49 பேரை கிரேடு 2 நிலையிலிருந்து கிரேடு 1 நிலைக் கும், 29 பேரை கிரேடு 1 நிலையிலிருந்து உதவி இயக்குநர்கள் கிரேடுக்கும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி பதவி உயர்வு கொடுத்தார். ஆனால், இவர் களுக்கு எந்த இடத்தில் போஸ் டிங் போடுவதுங்கிறது விருப்ப விண்ணப்பத் தின் அடிப்படையில் நடக்கணும். அப்படி விருப்பமனு கொடுத்தவங் களை இயக்குநர் தமிழ்ச் செல்வனே தொடர்புகொண்டு, நேரில் வந்து செட்டில் பண்ணி ஆர்டர் வாங்கிக்குங்கன்னு சொன் னாராம். இதற்கு முன்வராதவங் களை வெவ்வேறு இடங்களுக்கு தூக்கியடிச்சிட்டாராம். உள்துறைச் செயலாளரே உத்தரவு போட்ட பிறகு, இவர் இப்படி செயல் படுறாரேன்னு பாதிக்கப்பட்டவங்க புலம்புறாங்க.''

""சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கிட்டே புகார் செய்ய வேண்டியதுதானே?''

""அதுபற்றி யோசிக்கிறாங்க. ஏன்னா, இதிலே சட்ட மந்திரி கே.பி.எம்.முக்கும் பங்கு உண்டுன் னும் அவரோட சீனியர் பி.ஏ. சேகரின் அட்வைஸ்படி தான் நான் உங்ககிட்டே பேசுறேன்னு தமிழ்ச் செல்வன்  அள்ளி விட்ருக்காரு. அதனால எங்கே போய் புகார் சொல்லுறதுன்னு பாதிக் கப்பட்டவங்க முழிச்சிக் கிட்டிருக்காங்க. நான் அடுத்த மேட்டருக்கு வர்றேங்க தலை வரே.. ஏற்காடு இடைத்தேர்த லுக்கான வேட்பாளரை அறி விப்பதில் தி.மு.க முந்திக்கிடிச்சி. மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கத்தை அறிவாலயத்துக்கு அழைத்த கலைஞர், ஜெயிச்சிடு வோமான்னு கேட்டிருக்காரு. அதுக்கு சிவலிங்கம், வாக்காளர் களுக்கு ஆளுங்கட்சி பணம் கொடுக்காம இருந்தால், தேர்தல் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நலத்திட்ட உதவிகளை செய்யாமல் இருந்தால், காவல் துறையும் அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தாமல் இருந்தால்னு சொல்லிக்கொண்டே போக, குறுக்கிட்ட கலைஞர்.. ஆளுங்கட்சின்னா அதையெல்லாம்தான் செய்யும். அதைமீறி ஜெயிக்க முடியுமா, முடியாதான்னு கேட்டிருக்காரு. யோசித்த சிவலிங்கம், முடியும்னு சொன்ன பிறகுதான் வேட்பாளர் தேர்வு நடந்திருக்குது.''



""போட்டியிட விண்ணப்பித்த 42 பேரில் வெ.மாறனை எப்படி தேர்வு செய்ததாம் தலைமை?''

""வீரபாண்டி ராஜா தரப்பில் ஏற்கனவே நின்ற தமிழ்ச்செல்வனை சிபாரிசு செய்ய, செல்வகணபதி எம்.பி. தரப்பில் பார்வதியையும் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் தரப்பில் மாறனையும் பரிந்துரைத் திருக்காங்க. மாறன் எம்.பி.ஏ படிச்சவருங்கிறதாலேயும் புதுமுகம்ங்கிறதால விருப்பு  வெறுப்பு இல்லாம கட்சிக்காரங்க வேலை செய்வாங்கன்னும் ஓட்டுகள் அதிகமாகும்னும் அவர் பெயர் முன்னிலைக்கு வந்திருக்குது. போதாக்குறைக்கு, எவ்வளவு செலவு செய்யமுடியும்ங்கிற கேள்விக்கு, டெபாசிட்டாகவே 1 கோடி ரூபாய் கட்சிக்குத் தர்றேன்னு மாறன் சொன் னாராம். அவர் பெயரைத்தான் மு.க.ஸ்டாலின் கலைஞ ரிடம் பரிந்துரைத்திருக்கிறார். மாறன்ங்கிற பேரைக் கேட்டதுமே நெகிழ்ந்துபோன கலைஞர் மற்ற விவரங் களையும் கேட்டுக்கிட்டு, அவரையே வேட்பாளரா அறிவிச்சிட்டாரு. எப்போதும் ஜெ.தான் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிப்பார். இந்த முறை அவர் இன்னும் அ.தி.மு.க வேட்பாளரை முடிவு செய்யலை யாம். இடைத்தேர்தலில் ஆளுந்தரப்புதான் ஜெயிக்கும்ங் கிற நம்பிக்கையோடு செலக்ஷன் மெதுவா நடக்குதாம்.''

""எல்லாக் கட்சிகள்கிட்டேயும் ஆதரவு கேட்டு கலைஞர் கடிதம் எழுதினாரே? என்ன ரெஸ்பான்ஸ்?''

""தே.மு.தி.க இந்த  இடைத்தேர்தலில் போட்டியிடணும்ங்கிற முடிவை விஜயகாந்த் எடுத்திருக்காராம். இதில் அதிக ஓட்டு வாங்கிக் காட்டினால்தான், எம்.பி. தேர்தலில் கூட்டணி பேசும் கட்சிகளிடம் அதிக சீட் கேட்கமுடியும்ங்கிறது அவர் கணக்கு. காங்கிரஸைப் பொறுத்தவரை தி.மு.கவை ஆதரிப்பதா, தே.மு.தி.க.வை ஆதரிப்பதா? அல்லது தேர்தலை புறக்கணிப்பதான்னு ஒரு கமிட்டி அமைத்து தொண்டர்களிடம் கருத்து கேட்டு, அந்த ரிப்போர்ட்படி முடிவெடுக்கலாம்னு தமிழக காங்கிரஸ் சார்பில் மேலிடத்துக்குத் தெரிவிக்கப் பட்டிருக்குது. ஆனா, அங்கிருந்து இதுவரைக்கும் எந்த பதிலும் வரலையாம்.

""தி.மு.க வேட்பாளர் அறிவிக்கப்பட்ட வேகத்தில், ஏற்காடு தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தையும் மு.க.ஸ்டாலின் நடத்திட்டாரே?''

""கூட்டம் நல்லாத்தான் நடந்தது. தொண் டர்கள்கிட்டே உத்வேகம் இருந் தது. ஆனா, அதே அளவுக்கு கோஷ்டிப்பூசலும் வெளிப்பட் டது. ஸ்டாலினை வரவேற்கிற விஷயத்திலேயே சேலம் மாவட்ட எல்லையில் வீரபாண்டி ராஜா  கோஷ்டிக்கும் பனைமரத்துப் பட்டி ராஜேந்திரன் கோஷ்டிக்கும் மோதல். அப்புறம், செயல்வீரர்கள் கூட்டத்துக்கு ஸ்டாலின் வரும் வழியில் இரு கோஷ்டிகளுக்கும் மோதல். கூட்டம் முடிந்த பிறகும் மோதல்னு மூன்று சம்பவங்கள் நடந்து, நாலைஞ்சு பேருக்குக் காயம். ஒருத்தர் ஜி.ஹெச்சில் அட்மிட் ஆயிட்டாரு. வீரபாண்டி ராஜா, பனைமரத்துப்பட்டி ராஜேந் திரன், எஸ்.ஆர்.சிவலிங்கம்னு மூணு பேரின் கோஷ்டிகளை தி.மு.க தலைமை எப்படி சமா ளிக்கப் போகுதுங்கிறதுதான் ஏற்காடு தொகுதி தி.மு.கவின ரின் வருத்தமா இருக்குது.''

""திருச்சி தி.மு.க.வில் கே.என்.நேருவுக்கும் கே.கே.எம்.தங்கராஜுக்கும் நேருக்கு நேர் நடந்த வாக்குவாதம் பற்றி நம்ம நக்கீரனில் வந்திருந்த செய்தியைப் படிச்சியா?''

""படிக்காமலா? இன்னமும் இந்த ஃபைட் நீடிச்சிக்கிட்டுத்தான் இருக்குது. இதில் கே.கே. எம்.முக்கு செக் வைக்கிற மாதிரி, அவர் மகன் பாபுராஜை எதிர்த்து  இரண்டு முறை கவுன்சிலர் தேர்தலில் ஜெயித்த அவரோட சமுதாயத்தைச் சேர்ந்த ம.தி.மு.ககாரரான ராமமூர்த்தியையும் ம.தி.மு.க மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் மூவேந்தர் உள்ளிட்ட 100 பேரையும் தி.மு.கவில் இணைத்திருக்கிறார் கே.என்.நேரு. திருச்சி தி.மு.கவில் விறுவிறுப்பு இன்னும் குறையலை.''

""அதே திருச்சியிலிருந்து ஒரு தகவல்  எனக்கு கிடைச்சுதுப்பா.. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல ஊழல்களை அம்பலப்படுத்த பெரும் முயற்சி எடுத்த சீனிவாசனைப் பற்றி நம்ம நக்கீரனில் எழுதியிருந்தாங்க. அந்த சீனிவாசனின் முயற்சிகளை மையமா வச்சி "அங்குசன்'ங்கிற படத்தை மனுகண்ணன்ங்கிறவர் எடுத் தாரு. இது திருச்சி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை அதிர வச்சிருக்கு. அதேநேரத்தில், யு சான்றிதழ் பெற் றுள்ள இப்படத்துக்கு வரிச்சலுகை கொடுக்க தணிக்கைத் துறையினரே சிபாரிசு செய்தாங்களாம். அந்த கடிதத்தோடு அமைச்சர் ரமணாவைப் படக்குழு பார்க்க, அவர் உதவியாளரை கைகாட்ட, உதவியாளர் சரத்குமாரோ வரிச்சலுகை தர பெரியளவில் பேசியிருக்காரு. இலஞ்சத்துக்கு எதிரான படத்துக்கு லஞ்சம் கொடுத்து வரிவிலக்கு பெற வேண் டிய அவசியமில்லைன்னு படக் குழுவினரும் சீனிவாசனும் முடிவெடுத்துட்டாங்களாம்.''


""கிருத்திகா உதயநிதி டைரக்ட் செய்திருக்கிற "வணக்கம் சென்னை' படத்துக்கு "யு' சர்டிபிகேட் கிடைத்தும் தமிழக அரசு வரி விலக்கு கொடுக்கலை.  இதற்கான குழுவில் உள்ள அதிகாரிகளில் உள்ள ஒருவர், வரி விலக்கு தரலாம்னு பரிந்துரைச்சதுக்காக அவரை இடமாற்றம் செய்துட்டாங்கன்னு உதயநிதி ஸ்டாலின் தன்னோட ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்காரு.''

""சென்னைக்கு வரும் நரேந்திர மோடி இந்த முறையாவது ஜெ.வை சந்திப்பாரா?''


""அதைப் பற்றி நான் சொல்றேன். பத்திரிகையாளரும் வலதுசாரி எழுத்தாளருமான அருண்ஷோரியின் புத்தக வெளியீட்டுக்காகத்தான் சென்னைக்கு மோடி வர்றாரு. அந்த சமயத்தில் ஜெ.வை சந்திக்க அவருக்கு வேண்டிய பத்திரிகையாளர் மூலம் எடுக்கப்பட்ட ஆரம்பகட்ட முயற்சிகள் பலன் தரலை. இதை மோடிகிட்டே தமிழக பா.ஜ.க.வினர் சொன்னப்ப, நான் அருண் ஷோரிக்காகத்தான் சென்னைக்கு வர்றேன். ஜெ. அப்பாயிண்ட்மெண்ட் தந்தாலும் சந்திக்க மாட்டேன். அவர் தன்னை பிரதமர் வேட்பாளர்னு நினைச்சிக்கிட்டிருக்காரு. தேர்தலுக்கு முன்னாடி அவரோடு எந்த சந்திப்பும் வேண்டாம்னு சொல்லிட்டாராம் மோடி.''

 லாஸ்ட் புல்லட்!

உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்த தோழர் தியாகு, போலீசாரால் மீண்டும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலை யில், திங்களன்று தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு பிரதம ரின் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார். உடனடியாகக் கிடைத்தது. கலைஞரின் சார்பில் பிரதமரிடம் பாலு, ""காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என தி.மு.க. தொ டர்ந்து வலியுறுத்துகிறது. அதைத்தான் தியாகுவும் வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இது சீரிய ஸான மேட்டர்'' என்று சொன்னார். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடு மாறும் என கலைஞர் ஏற்கனவே தெரிவித் திருந்ததை நக்கீரனில் வெளியிட் டுள்ளோம். இந்நிலையில் டி.ஆர். பாலுவுக்கு பதிலளித்த பிரதமர், ""ஈழத்தமிழர் நலனில் இந்திய அரசுக்கு அக்கறை உள்ளது. நல்ல முடிவே எடுக்கப்படும். கலைஞரிடம் சொல்லி தியாகுவின் உண்ணாவிர தத்தை கைவிடச் சொல் லுங்கள். நானும் கலைஞ ருக்கு கடிதம் எழுதுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார். எம்.பி. தேர்தல் நெருங்கு வதால் மத்திய அரசு இறங்கி வரத் தொ டங்கியுள்ளது என்கிறது டெல்லி வட்டாரம்.

போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் பிடிபட உதவியாயிருந்த பல போலீசாரின் பெயர்கள் பதக்கம், பரிசு, பதவி உயர்வில் விடுபட்டிருந்ததால் போலீஸ் தரப்பில் சலசலப்பு காணப்பட் டது. இந்நிலையில் பெரியமேடு இன்ஸ்பெக்டர் வீரக்குமார், பெண் காவலர் ராதிகா 5 காவ லர்கள் ஆகியோருடன் நெல்லை- மதுரை சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருமாக 245 பேர்களை லிஸ்ட்டில் சேர்த்து ஜெ. 14-ந்தேதி அறிவித்திருக் கிறார். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு தொடங்கி இன்றுவரை யில் "டெரர்' குறித்த அப்டேட் டில் இருக்கும் சென்னை மதத் தொடர்பான நுண்ணறிவுப் பிரிவின் அத்தனைபேரும் இதில் மிஸ்ஸிங் ஆகியிருக்கிறார்கள். இதனால் 18-ந்தேதி "மோடி'யின் சென்னை "விசிட்'டில் இந்த டீமின் ஒத்துழைப்பு கேள்விக் குறியாகி நிற்கிறது.

ad

ad