புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2013


               ஸ்கூலுக்குப்போற சின்னப் பசங்க, காலேஜுக்குப் போற டீன்ஏஜ் பசங்கன்னு பாக்கெட்டுல பேனா இருக்கோ இல்லையோ ஆனா ஜொள்ஃபோன்... ஸாரி செல்ஃபோன் இல்லாம இருக்காது! என்னதான் பள்ளி, கல்லூரிகளில் செல் ஃபோன் பயன்படுத்தக்கூடாதுன்னு ரூல்ஸ் அண்ட் ரெகு லேஷன்ஸ் கொண்டு வந்தாலும் ஆசிரியர்களின் கண்ணுல ஆஃப்பாயில் போட்டுட்டு, செல்ஃபோன் யூஸ் பண்ற கில்லா டிப் பசங்க இருக்கத்தான் செய்யுறாங்க.  ஆபாச படங்களை
செல்ஃபோனிலேயே டவுன்லோடு செய்து பார்க்க முடியும் என்பது செல்ஃபோனை வாங் கிக் கொடுக்கும் பெற்றோர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்?  அதுவும், தமிழ்நாட்டுப் பெண்களின் அந்தரங்க காட்சி என்றால் நம்ம ஊரு இளசுகள், "டேய் மச்சான் என் செல்லுக்கு அனுப்புடா'’என்று ஓவர் கிளு கிளுப்பின் உச்சக்கட்டத்துக்குப் போய் ரூட் மாறி வாழ்க்கைக்கு வேட்டு வைத்துக்கொள்கிறார்கள். அப்படித்தான், இளசுகளின் செல் ஃபோன்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது தமிழகத்தை சேர்ந்த இளம்பெண்ணின் அந்தரங்க வீடியோக்கள். வீடியோவில் சிக்கிய இளம்பெண் ணின் வருங்கால கணவர் அந்த வீடியோக்களை பார்த்து விட்டு... அந்தப் பெண்ணிடமே அவர் கேட்க... ""எனக்குத் தெரியாம எடுத்துட்டாங்க'' என்று அந்த இளம்பெண் சொல்ல... விஷயம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துவிட்டது.

குற்றம் நடந்தது என்ன? என்று நாம் விசாரணையில் இறங்கியபோதுதான் இதன் பின்னணியில்... இளம்பெண்களை  ஆபாச வீடியோக்கள் எடுத்து இணைய தளங்களுக்கு விற்பனை செய்து பணம் பார்க்கும் நெட்வொர்க் இருப்பது ஷாக் அடிக்க வைக்கிறது. அதிர்ச்சியிலிருந்து மீளாத ராஜா "ஃபோட்டோ வேண்டாம் ப்ளீஸ்' என்றபடி நம்மிடம் பேச ஆரம்பித்தார். 



""நான் சென்னை ஆவடி அருகில் இருக்குற பட்டாபிராமில் இருக்கேன். என்னோட பக்கத்துத் தெருவுல இருந்தவ தான் இந்த விஜி. எங் கக் குடும்பத்துக்கும் அவங்க குடும்பத்துக்கும் 25 வருட பழக்கம். 

விஜியோட அப்பா (மனோகரன்) மிலிட்டிரி சர்வீஸ்ல இருக்கிறதால சென்னை நந்தம்பாக்கத் துல இருக்குற மிலிட்டிரி என்ஜினியரிங் கோட் ரஸுக்கு சில வருடங் களுக்கு முன்னால விஜியோட குடும்பம் போயிடுச்சி. பிஸினஸ்ல சில பிரச்சினைகள். அதுல முன்னேறணும்குற உத்வேகத்துல  கல்யாணம் பண்ணிக்காம அப்படியே இருந்துட்டேன். விஜி ஃபேஷன் டெக்னா லஜி முடிச்சிட்டு அம்பத்தூர் எஸ்டேட்ல வேலை பார்த்துக்கிட்டிருந்தா.  

அப்போதான், விஜியை கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாங்க விஜியோட அம்மா. எனக்கும் 38 வயசாகிடுச்சி. விஜிக்கு 27 வயசு. விஜியும் எங்கிட்ட நல்லா பேசிப் பழகுறா. அவளையே திருமணம் பண்ணிக்கிட்டா லைஃப் நல்லாயிருக்கும்னு நினைச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன். விஜியும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா. ஆனா... இப்படி ஆபாச வீடியோவில் பல ஆண்களோட அந்தரங்கமா இருப்பாள்னு நினைச்சுக்கூடப் பார்க்கலைங்க''’ என்றவரை ஆசுவாசப்படுத்தி... "ஆபாச வீடியோவில் இருக்குற விஷயம் உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?' என்று கேட்டோம். "என்னோட சந்தேகத்தாலதான் கண்டுபிடிக்க முடிஞ்சது'’’-சந்தேகங்களை பட்டியலிட்டார். 

சந்தேகம்-1 :  சிவாங்குற பையன் மலேசியாவிலிருந்து விஜியோட வீட்டுல வந்து ஒருமாசம் தங்கியிருந்தாங்குறது தெரிய வந்தது. அதுபற்றி கேட்டேன். ‘"உங்களுக்கு எதுக் கெடுத்தாலும் சந்தேகம்தான். சிவா அண்ணா ரொம்ப நல்லவரு. அவரைப் போயி தப்பா நினைக்கிறீங்களே'ன்னு மழுப்பினா.

சந்தேகம்-2 : ஒருநாள் வெளியூர் போயிட்டு வரும்போது நண்பர் ஒருத்தர்... "கிறிஸ்துவ சபைகள், பள்ளி-கல்லூரிகளில் பப்பட் ஷோ பண்ற ரமேஷ் நல்லவன் கிடையாது. அவன் பொம்பள விஷயத்துல ரொம்ப வீக்கு'ன்னு சொல்லிக்கிட்டி ருந்தாரு. எனக்கு ரொம்ப ஷாக். ஏன்னா, இந்த ரமேஷும் விஜி வீட்டுல கொஞ்சநாள் தங்கியிருந்தவன்தான்... ஆனா, அடிக்கடி ரமேஷை பற்றி விஜி ரொம்ப பெருமையா பேசுவா.‘

சந்தேகம்-3 : நந்தம்பாக்கத்துல இருக்குற விஜியோட வீட்டுக்குப் போயிருந்தேன். விஜி வெளியில நின்னுக்கிட்டி ருந்தப்போ, ஐம்பது வயசுக்காரர்... அவர் பேரு பந்தா பரந் தாமன். அந்த ஆளு இவ தொடைய கிள்ளிக்கிட்டே "பொண்ணு நல்ல பொண்ணுப்பா. கல்யாணம் பண்ணிக் கப்பா'ங்கிறான். இவளும் சிரிச்சுக்கிட்டு இருக்கா. கொஞ்ச நேரத்துல அவரோட பேண்டை எல்லாம் புடிச்சி இழுத்து விளையாட ஆரம்பிச் சிட்டா. 

விஜி... ஏதோ, பெரிய தப்பு பண்றான்னு மட்டும் தோணுச்சி. "இங்க பாரு விஜி. உன்னோட  ஒரு சிம்கார்டு காணோம்னு தேடிக்கிட்டிருந்தியே, அது எங்கிட்டத்தான் இருக்கு. உன் செல் போன்ல பட்டாபிராம்ல இருக்குற கால்டாக்ஸிகாரன்லயிருந்து கறி வெட்ற வன் வரைக்கும்  அவனுங்களோட நம்பர் களை சேவ் பண்ணியிருக்க. நான் எல்லாத் தையும் செக் பண்ணிட்டேன். என்னை ஏமாத்திட்டியே விஜி. இப்பவாவது உண்மைய சொல்லு'ன்னதும்தான்...  

"உன் காலில் விழுறேன்... என்னை  மன்னிச்சிடு'ன்னு உண்மைய சொல்ல ஆரம்பிச்சா. அதை அப்படியே சொல்றேன் கேளுங்க...'' பெருமூச்சுவிட்டபடி தொடர்ந் தார்.  

""நான் ஏஜ் அட்டண்ட் பண்ணின தும் என்னோட அத்தை புருஷன் என் கிட்ட கொஞ்சம் தப்பா நடந்துக்கிட்டாரு. அதுக்கப்புறம்தான் பப்பட் ஷோ பண்ற ரமேஷும் நானும் தப்பு பண்ணினோம். எனக்கு அந்த ஆசை அதிகமாகும் போது என் ஃப்ரண்டு மரியாவும் (திரு மணமான பெண்) நானும் "சந்தோஷமா' ஈடுபடுவோம். எங்க வீட்டுல தங்கியிருந்த சிவாங்கிற பையன் எனக்கு முத்தம்தான் கொடுத்தானே தவிர மற்றபடி எந்த தப்பும் பண்ணல. எங்க கோட்ரஸ்ல இருக்குற இவாஞ்சலினோட ஃப்ரண்ட்ஸ்ங்க அசோக், இளங்கோ, செந்தில்ராஜ் இவங்கக்கூடல் லாம் பழக்கம் இருந்தது உண்மைதான்.  ஆனா, எந்த தப்பும் பண்ணல. ஆண்களால் நான் சீரழிஞ்சுட் டேன்'’அப்படின்னு விஜி சொல்ல... எனக்கு  அவள் சொன்னதில் நம்பிக்கை இல்ல. சந்தேகத்தோடு விஜியின் பெயரை நெட்டில் டைப் செய்தபோது அவளின் அந்தரங்க காட்சிகள் வந்தபோதுதான் அதிர்ந்துபோனேன். "இந்த வீடியோக்கள்லாம் எனக்கு தெரியாம எடுக்கப்பட்டது'ன்னு அழ ஆரம்பிச்சா. 

"அப்படின்னா, போலீஸில் கம்ப்ளைண்ட் கொடு'ன்னு சொன்னேன். வேற வழியில்லாம கமிஷனர் ஆஃபீஸ்ல வந்து 6-8-2013 அன்று கம்ப்ளைண்ட் கொடுத்தோம். ஆனா, போலீஸ் விசாரணைக்கு கூப்பிட்டா வரமாட்டேங்கறா. இந்த வீடியோக்கள் எல்லாமே அவளோட விருப்பத்தோ டும் அனுமதியோடும்தான் எடுக்கப்பட்டிருக்கு. கிண்டி, அசோக்நகர், பல்லாவரம்னு பல இடங்களில் இந்த விஜி பேங்க்ல அக்கவுண்ட் வெச்சிருக்கா. வேலைக்கே போகாத இவளோட அக்கவுண்ட்டு களுக்கு பணம் மட்டும் வந்துக்கிட்டே இருக்கு. 

அப்பேற்பட்டவளை விட்டு விலகலாம்னு நினைச்சா, "நீ கல்யாணம் பண்ணிக்கலைன்னா தற்கொலை பண்ணிப்பேன். இல்லைன்னா பாலியல் புகார் கொடுத்து உன்னை உள்ளே தள்ளிடுவேன்... ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ'ன்னு ப்ளாக் மெயில் பண்றா. அவரது உறவினர்களும் என்னை மிரட்டுறாங்க. இவளை எப்படிங்க கல்யாணம் பண்ணிக்க முடியும்? நான் மட்டும் என்ன இளிச்ச வாயனா? அவள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி 3-10-2013 அன்று புகார் கொடுத்துட்டேன்''’என்று குமுறி வெடித்தவர், ""இதெல்லாம் விஜி உண்மை என்று ஒப்புக்கொண்டு செல்ஃபோனில் பேசியதற்கான ஆடியோ ரெக்கார்டு'' என ஆதாரங்களையும் நம்மிடம் கொடுத்தார்.

அந்த ஆடியோ ரெக்கார்டிங்கில்  ""இண்டர்வ்யூவுக்கு வா'ன்னு சொல்லி அசோக் என்கிறவன்தான் மவுண்ட் ரோடு பக்கத்துல இருக்குற கதீட்ரல் ரோடு பாலத்துக்கிட்ட கூட்டிட்டுப் போனான். ஆனா, அங்க என்னை விட்டுட்டுப் போயிட்டான். அவனோட ஃப்ரண்டு எங்கிட்ட தப்பா நடந்துக்கிட்டான். செந்தில்ராஜ் என்கிறவன் எனக்கு முத்தம் கொடுத்திருக்கான் அவ்வளவுதான். அப்புறம் ஒரு அஞ்சு ஆறுபேர் கூட தப்பு பண்ணியிருக்கேன் அவ்ளோதான்''’ என்று சொல்லியிருக்கிறார் விஜி.

இந்தப் புகாரை விசாரித்துவரும் ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் இளவரசனிடம் கேட்டபோது, “""இது ஃபேமிலி விஷயம், பேசி தீர்த்துக்கிறோம்'’னு சொல்லி அந்த பொண்ணு விசாரணைக்கு வரலைங்க. அதனாலதான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியல''’என்கிறார். 

அந்தரங்க வீடியோவில் சிக்கிய இளம்பெண் விஜயலட்சுமியை செல்ஃபோனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ""ராஜாவை திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தலைங்க. அதேமாதிரி, எனக்குத் தெரியாம என்னை ஆபாச வீடியோக்கள் எடுத்துட்டாங்க. பெரியவங்கக்கிட்டப் பேசி (இப்ப மட்டும் பெரியவங்க) ஆலோசனை பண்ணி என்னை வீடியோ எடுத்தவங்க மேல புகார் கொடுக்கலாம்னு இருக்கேன்''’’ என்றவரிடம்  "உங்களுக்குத் தெரியாமல் எடுத்துவிட்டார்கள் ஓ.கே. உங்களுடன் இருப்பது யார் என்று சொன்னால் அதை வைத்து கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே?'’என்று கேட்டால் அவரிடம் பதில் இல்லை.

தெரிந்தோ தெரியா மலோ பெண்கள் ஆபாச வீடியோக்களில் சிக்கிக் கொள்வதால் அந்த வீடி யோக்களைப் பார்க்கும் இளசுகள் பாலியல் குற்றங் களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.

-மனோ 

ad

ad