14 அக்., 2013

ஆஸி’யுடனான முதல் ஒருநாள் போட்டி: இந்தியா தோல்வி
புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க அசோஷியேசன் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியா வுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹக்ஸ் 53 பந்துகளில் 47 ரன் எடுத்தார். பின்ஸ் அதிரடியாக ஆடி 79 பந்துகளில் 3 சிக்ஸர் 8 பவுண்டரிகளுடன் 72 ரன் குவித்தார். அவருடன் 82 பந்துகளில் பெய்லி ஜோடி சேர்ந்து 85 ரன் குவித்தார். மேக்ஸ்வெல் 31ரன்னும், பால்க்னர் 27 ரன்னும் குவித்தனர். 50 ஓவர் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 304 ரன் எடுத்து இமாலய இலக்கை நிர்ணயித்தது.
305 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 232 ரன்களே எடுத்து தோல்வியைச் சந்தித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 61 ரன்னும், ரோஹித் சர்மா 42 ரன்னும், சுரேஷ் ரெய்னா 39 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம்