14 அக்., 2013

சிறிலங்காவில் ஐ.நாவின் முயற்சிகள் தோல்வி – பான் கீ மூனின் பேச்சாளர்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கவும், போரை இடைநிறுத்தவும் ஐ.நா வலியுறுத்திய போதிலும், அந்த திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ஐ.நா பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

நியுயோர்க்கில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ஐ.நா பொதுச்செயலரின் இணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக்,

“அந்த நேரத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஐ.நா எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது.

அந்த சமயத்தில் நாம் வெளியிட்ட அறிக்கைகளை பார்க்க வேண்டும்.

அமைதிக்கான வழிகளுக்கு அழைப்பு விடுத்தும், போர் நிறுத்தப்பட்டு, அந்தப் பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நாம் அழைப்பு விடுத்திருந்தோம்.

ஒவ்வொரு சூழ்நிலைகளும் வித்தியாசமானவை. அறிக்கைகளும் வேறுவேறானவை.

ஆனால், பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அழைப்பு விடுத்திருந்தோம்.

போரை நிறுத்தவும், பாதுகாப்பு வலயங்களை உருவாக்கவும் இருதரப்பிடமும் நாம் திட்டங்களை முன்வைத்திருந்தோம்.

ஆனால், அந்தத் திட்டங்கள் பயனளிக்கவில்லை அல்லது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.” என்றும் அவ