புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2013

கொமன்வெல்த் மாநாடு: நேற்றைய கூட்டத்தில் முடிவில்லை! குழப்பத்தில் இந்திய மத்திய அரசு!
கொழும்பில் வரும் 15 முதல் 17-ஆம் தேதிவரை நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள்   மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் பரவலாக எதிர்ப்புக் குரல் வலுத்துவரும் நிலையில், இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் மத்திய அரசு குழப்பத்தில் உள்ளது. 
கொமன்வெல்த் கூட்டத்தில் பிரதமரோ அல்லது வெளியுறவு அமைச்சரோ பங்கேற்கும் முடிவை தற்போதே வெளியிட்டால் அது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடிய சூழலுக்கு வழிவகுக்கலாம் என்பதால், இந்த விவகாரத்தில் முடிவை எடுக்க முடியாமல் மத்திய அரசு குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் திங்கட்கிழமை கூடி ஆலோசிக்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளதாக அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
டில்லியில் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்களான ப. சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எனினும், சில நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற அக்கூட்டத்தில் கொமன்வெல்த் கூட்ட விவகாரத்தை ஜெயந்தி நடராஜனால் எழுப்ப முடியவில்லை என்று கூறப்படுகிறது.
கூட்டம் முடிந்தவுடனேயே அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டினார்.
அதில், கொமன்வெல்த் கூட்டம் தொடர்பாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலைமை குறித்து அமைச்சர்கள் விவாதித்ததாகத் தெரிகிறது.
காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதால் அதில் இவ்விவகாரத்தை மீண்டும் விவாதிக்கலாம் என சில காங்கிரஸ் அமைச்சர்கள் கூறிய யோசனையை பிரதமர் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.
மேலும், இது குறித்து மூத்த அமைச்சர்களுடன் மன்மோகன் சிங் திங்கட்கிழமை மீண்டும் ஆலோசனை நடத்துவார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ad

ad