புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2013

சுதந்திரமான போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்துவேன் – டேவிட் கமரோன் வாக்குறுதி

சிறிலங்காவில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கொமன்வெல்த் உச்சி மாநாட்டில், வலியுறுத்தப் போவதாக, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் உறுதியளித்துள்ளார்.

பிரித்தானிய தமிழ் சமூகத்திடம் அவர் இந்த உறுதிமொழியை நேற்று வழங்கியதாக, ஏஎவ்பி, றொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்காவில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வலியுறுத்தும் தமிழ்ச் சமூகப் பிரதிநிதிகளை பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் நேற்று சந்தித்துப் பேசினார்.
“போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் மோசமான போர்க்குற்றங்கள் மற்றும் பாலியல் வன்முறைகள், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எவரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் இன்னமும், காணாமற்போன தமது உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

நான் அங்குள்ள மாற்றங்களை பார்க்க வேண்டும். கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதால் அதைச் செய்ய முடியும் என்று நம்பவில்லை.

அதைச் செய்வதற்கு சரியான வழி அங்கு செல்வதே.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக வெளிப்படையானதும், சுதந்திரமானதுமான விசாரணையை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவிடம் கோரவுள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய பிரதமர் செயலக பெண் பேச்சாளர்,

“குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக கோரி வருகிறோம். இன்று வரை அது நடக்கவில்லை.

சுதந்திரமான விசாரணைகள் ஏதும் நடத்தப்படாத நிலையில், ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டேவிட் கமரோன் நம்புகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

ad

ad