புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2013


           நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய காய் நகர்த்தல்கள் விறுவிறுப்பு அடைய... காங்கிரஸ்-வி.சி.க. இடையே லேசாக அல்ல, கடும் உரசல். கடலூர் மாவட்டத்தில், அதுவும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி.யாக உள்ள சிதம்பரம் தொகுதியில்.

இரு தரப்பினரும் அடுத்தவர் பேனர்களைக் கிழிப்ப தும், கொடிக்கம்பங்களைச் சாய்ப்பதும், மோதிக்கொள் வதும், போலீசில் புகார் கொடுப்பதுமாக இருந்துவரு கிறார்கள். இவ்வளவுக்கும் மையமாக இருப்பது, ஒரே ஒரு நபர்தான். அவர் அனுபவமான அரசியல்வாதியும் அல்ல. 
நிற்க... 


காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில், தூய்மையான ஊராட்சியாக முதலமைச்சர் விருதும் ’சிறந்த ஊராட்சியாக பிரதமர் விருதும் பெற்றுள்ளது, நாட்டார்மங்களம் ஊராட்சிமன்றம். இதன் தலைவர், சுதாவின் கணவர் மணிரத்தினம்தான் அந்த சர்ச்சைக்குரிய புள்ளி. 

""எல்லா சாதியினருக்கும் பொது மயானம் எங்கள் பஞ்சாயத்தில் மட்டும்தான் இருக்கிறது. இது எந்த சாதித் தலைவர்களாலும் செய்ய முடியாதது''’என உள் அர்த்தத் துடனேயே பேசிவருகிறார் மணிரத்தினம். 

கட்டிடப் பொறி யாளரான இவர் சிதம் பரம், காட்டுமன் னார்கோயில், புவன கிரி, அரியலூர், குன்னம், ஜெயங் கொண்டம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதி களிலும் நல்லது, கெட்டது எதுவானாலும் பெரும்பாலும் ஆஜராகிவிடுகிறார். தலித் மக்களின் பகுதிகளைக் குறிவைத்து காங்கிரஸ் கொடி ஏற்றிவருகிறார். கடந்த சில மாதங்களில் மட்டும் அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 400 இடங்களில் இப்படி கொடியேற்றி யுள்ளார். இந்த காட்சியை எதிர்பார்க்காத வி.சி.க. நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சியில்தான் இருக்கிறார்கள்.  

இந்த அரசியல் ஆடுகளத்தில் என்ன தான் நடக்கிறது? புதுச்சேரி, பிள்ளையார் குப்பத்தில் கட்டுமானப் பணி ஒன்றில் இருந்த மணிரத்தினத்தைச் சந்தித்துப் பேசினோம். இடையிடையே திகைப்பையூட்டியும், "இது நடக்கப்போகுது பாருங்க'’என்கிறபடியும், சர்வ சாதாரணமாகப் பேசிக்கொண்டே போனார்.   

பொதுவா, சிதம்பரம் தொகுதி, காங் கிரஸ் செல்வாக்குள்ளது. தலைவர் இளைய பெருமாளுக்குப் பிறகு, இங்க காங்கிரஸ் துவண்டுபோனது உண்மைதான். இப்போ, நிலைமை தலைகீழ். தலித் இளைஞர்களும் பெரியவர்களும் பெண்களும் காங்கிரசின் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். எங்கள் பகுதிகளில் காங்கிரஸ் கொடி பறக்காத இடம் இல்லை. 



இலங்கை அகதிகளைப் பற்றிப் பேசும் தமிழ் உணர்வாளர்கள் செய்யாததை நான் செய்கிறேன். காட்டுமன்னார்கோயிலில் இலங்கை அகதிகளின் பிள்ளைகள் 54 பேரை தத்தெடுத்து, படிக்க வைக்கிறேன். எங்கள் ஊராட்சியில் எந்த சாதியினர் இறந்தாலும், ஈமச்சடங்கு செய்ய வீடு தேடிப்போய் 2000 ரூபாய் கொடுக்கிறேன் (கணக்கு வச்சிருக்கீங்களா?). இந்த ’சேவை யைப் பரவலாக செய்வதற்காக, அரசியல் அதிகாரத்தைப் பெற நினைக்கிறேன். பணத்தைக் காட்டி கூட்டம் கூட்டுவ தாக என்னைச் சொல்பவர் கள், பத்து பேருக்கு நல்லது செய்யட்டுமே? ஆண்டுக்கு 3 கோடி வருமானவரி செலுத்திவருகிறோம்; மற்றவர்களைப் போல நான் இல்லை.

வி.சி.க.வில் சீட் தராததுதான் என் றெல்லாம் சொல்கிறார்கள். சாதிக் கட்சியில் போட்டியிட நினைத்தது இல்லை, ஒருபோதும் அந்தத் தவறு செய்யமாட்டேன். வி.சி.க.வில் ரவிக்குமார் வெற்றிபெற வாய்ப்பு இல்லை, வேட்பாளரை மாற்றிப் போடுங்கள் என்றுதான் சொன்னேன். திருமாவளவனுக்காகவும் ரவிக்குமாருக்காகவும் உடல்உழைப்பும் நிதியுதவியும் செய்தேன். இதுவரை அவர்களிடமிருந்து ஒரு பைசாகூட நான் வாங்கியது இல்லை. 

கடலூர் மாவட்ட வி.சி.க. நிர்வாகிகள் இன்றுவரை என்னிடம் பணம் வாங்கிட்டுதான் இருக்கிறாங்க. துண்டுபிரசுரம் போடக் கூட என்னிடம் வந்து பணம் கேட்பார்கள். 5 சதவீதம் பேர்தான் என்னிடம் பணம் வாங்காதவர்கள். எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கு. சிலர் நாவடக்கம் இல்லாமல் பேசுகிறார்கள். காங்கிரசில் இருந்துகொண்டே வி.சி.க.வுக்கு பணம் தருவது, துரோகமா என்றால், எஸ்.சி.கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் நிற்கவேண்டும் என நினைத்து, வி.சி.க.வில் உள்ளவர்களை நான் காங்கிரஸ் கட்சிக்குக் கொண்டுவந்துட்டேன் இது அரசியல் நெளிவுசுளிவு. பல கட்சியிலும் கூப்பிடுகிறார்கள், காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் போகமாட்டேன். 

சிதம்பரம் தொகுதி நிலவரத்தை ராகுலிடம் சொன்னபோது, என்னிடம் பெருமைப்பட்டார். அவருக்கு இந்தத் தொகுதி பற்றி தெரியும். "இங்கு தலித் மக்கள் காங்கிரசைவிட்டு விலக, என்ன காரணம், அவர்களை மீண்டும் காங்கிரசுக்குக் கொண்டுவர என்ன வழி?' என்று என்னிடம் ஒரு ரிப் போர்ட் கேட்டுள்ளார்; அதைத் தயாரித்து வைத்துள்ளேன்.

காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால், நிச்சயம் நான் சிதம்பரத்தில் போட்டி யிடுவேன் மாற்று சமுதாயத் தினர் மற்றும் தலித் மக்கள் ஆதரவோடு வெற்றி பெறுவேன். கூட்டணி என்றாலும், நிச்சயம் சிதம்பரம் தொகுதி காங்கிரசுக்கு தான். கூட்டணி மாறி, திருமா நின்றாலும் தொகுதி நிலைமை அவருக்குத் தெரியும், ஈசியா ஜெயிப்பேன்னு நான் சொல்வது மமதை அல்ல, உண்மை, எதார்த்தம்''’’ என்றவர்... 

கடைசியாக,“""என்னை விமர்சிக்கும் இளைஞர்கள், சாதி மோதலில் ஈடுபடாமல், நல்லா படித்து பொருளா தாரத்தில் வளரவேண்டும். அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தாரை நேசிக்க வேண்டும். சாதிக் கட்சியில், குற்ற வழக்கில் சிக்கவேண் டாம். என்னைத் தேவை யில்லாமல் சீண்டிப் பார்க்க வேண்டாம்''’என்று முடித் தார். 

"இவரை வைத்து, யாரோ என்னவோ செய் றாங்க. இதில் ஏதோ வில்லங்கம் இருக்குது'’ என்று சிறுத்தை கட்சியினர் மத்தி யில், மணிரத்தினத்தின் அரசியல் புரியாத புதிராக வே இருக்கிறது!  

இந்தப் புதிருக்கான விடை வராமலா போய் விடும்!

ad

ad