புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2013




            ""ஹலோ தலைவரே...  தீபாவளிக்கு பல தலைவர்களும் வாழ்த்துச் சொல்லியிருந்தாலும், திராவிட இயக்க அரசியல் தலைவர்களான கலைஞர், வைகோ போன்றவங்க வாழ்த்துவது வழக்கமில்லை. அப்படிப்பட்ட கலைஞரையே நேரில் சந்திச்சி, தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு வந்திருக்காரே ப.சிதம்பரம்... கவனிச்சீங்களா?''

""தீபாவளிக்கு தி.மு.க மா.செ.க்களோ அறிவாலயத்தில் உள்ள நிர்வாகிகளோகூட கலைஞருக்கு வாழ்த்து சொல்லமாட்டாங்க. சொந்தக் கட்சிக்காரங்களே சும்மா இருக்கிற நேரத்தில், ப.சி எதற்கு கலைஞரை சந்திச்சி தீபாவளி வாழ்த்து சொன்னாராம், அப்படி என்ன வாழ்த்தாம் அது?''நன்றி நக்கீரன் 


""நானும் விசாரிச்சேங்க தலைவரே... ...  ப.சி. மேலே கலைஞருக்கு செமத்தியான கோபம் இருந்ததுங்கிறது  அரசியல் வட்டாரத்தில் உள்ள பலருக்கும் தெரியும். அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி பல கட்சிப் பிரமுகர்கள் வீட்டு நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்ளும் வழக்கமுள்ளவரான கலைஞர், ப.சி.யோட அம்மா இறந்தபோது அதற்கு நேரிலும் போகலை. போகவிரும்பிய கட்சி நிர்வாகிகளையும் அனுமதிக்கலை. காரணம், 2ஜி உள்பட பல விஷயங்களிலும் தி.மு.கவுக்கு எதிரா ப.சி. செயல்பட்டாருங்கிற கலைஞரின் கோபம்தான். தான் அப்படி இல்லைங்கிறதையும் கலைஞருக்கு ப.சி. சொல்லிவிட்டாரு. ஆனாலும் கோபம் குறைந்தபாடில்லை. இந்தச் சூழலில்தான் தீபாவளியன்னைக்கு கலைஞரை சந்திச்சிட்டு வந்த ப.சி., அவருக்கு தீபாவளி வாழ்த்துச் சொன்னதா நிருபர்கள்கிட்டே  சொன்னாரு.''
""உண்மையில் என்ன பேசினாங்களாம்? எதற்காக இந்த சந்திப்பாம்?''

""எம்.பி. தேர்தல் கூட்டணி தொடர்பா தி.மு.க. இன்னும் உறுதியான முடிவு எதையும் எடுக்கலை. இப்போதைக்கு தி.மு.க கூட்டணியில் தலித் கட்சிகளான விடுதலை சிறுத்தைகளும், புதிய தமிழகமும் இருக்குது. அதுபோல இஸ்லாமிய கட்சிகளான முஸ்லிம்லீக்கும், மனிதநேயமக்கள் கட்சியும் இருக்குது. மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை, தி.மு.க. தனித்தே  தேர்தல் களத்தை சந்திக்கலாம்ங்கிற எண்ணத்தில் இருந்தாரு. இப்ப அவருக்கு ஒரு சின்ன யோசனை. நரேந்திர மோடியின் இமேஜை மீடியாக்கள் உயர்த்திக்கொண்டே இருப்பதால், அவரோடு சேர்ந்து எம்.பி. தேர்தலை சந்தித்தால், ஜெ.வின் செல்வாக்கையும் தடுக்கலாம், டெல்லி அரசியலிலும் தி.மு.கவின் செல்வாக்கை உயர்த்திக்கொள்ளலாம்னு ஸ்டாலின் நினைக்கிறாராம். இதை கலைஞர்கிட்டேயும் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்காரு. பல அரசியல் களங்களைக் கண்டவரான கலைஞர் இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வேணாம்ங்கிற எண்ணத்தில் இருக்காரு. தி.மு.க.வுக்குள் ஓடும் எண்ண ஓட்டத்தைப் புரிஞ்சிக்கிட்டுத் தான் ப.சிதம்பரம் பாய்ந்து வந்து கலைஞரை சந்திச்சிருக்காரு.'' 

""கூட்டணி பற்றி என்ன பேசினாங்களாம்?'' 

""அதற்கு முன்னாடி, தன் மீது கலைஞருக்கு இருக்கிற கோபத்தைக் குறைக்கும் வகையில் ப.சி பேசியிருக்காரு. 2ஜி உள்பட எதிலும் தி.மு.கவுக்கு எதிரா, தான் செயல்பட லைன்னு நேரில் கலைஞர்கிட்டே சொன்ன ப.சி, தன்னோட துறை மூலமா முடிந்தளவு செய்த உதவிகளையும் எடுத்துச் சொன்னாராம். அது சம்பந்தமான சில சம்பவங்களையும் சுட்டிக்காட்டினாராம். பி.சி.சாக்கோ தலைமையிலான ஜே.பி.சி அறிக்கையில் ஆ.ராசாவோட வாக்குமூலத்தை இணைக்கலை. அந்த வாக்குமூலத்தில்தான் 2ஜியில் பிரதமருக் கும் ப.சி. உள்ளிட்டவங்களுக்குமான தொடர்புகளை ராசா தெளிவா சொல்லியிருந்தாரு. அதை ஜே.பி.சி. அறிக்கையோடு இணைக்காததால் தி.மு.க செம கடுப்பாயிடிச்சி. அந்தக் கோபத்தை முரசொலியில் விரிவா எழுதியிருந்தாரு கலைஞர். அது வெளி யாகியிருந்த சமயத்தில்தான் கலைஞரை ப.சி. சந்திச்சாரு.'' 

""ஆக, 2ஜி பற்றி விளக்கம் கொடுப்பதே ப.சி.க்கு முக்கிய வேலையா இருந்திருக்கும்.''

""அதற்கடுத்து, காமன்வெல்த் மாநாடு பற்றி பேச்சு வந்திருக்குது. மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் கலந்துக்கணும்னும், யாழ்ப்பாணம் பகுதி களை நேரில் பார்வையிடணும்னும் இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனே அழைப்பு விடுத்திருப்பதை ப.சி. எடுத்துச்சொல் லியிருக்காரு. கலைஞரோ, இசைப்பிரியா பற்றி சேனல் 4-ன் வீடியோவை சுட்டிக்காட்டி, இதைப் பார்த்தா உங்க நெஞ்சம் பதறலையா? இதற்கப்புற மும் இலங்கையில் நடக்கிற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக்கப்போகுதா? இப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல இந்தியா என்ன செய்தி ருக்குது? தமிழர்களின் உணர்வுகளை மதிப்பேன்னு பிரதமர் எனக்கு கடிதம் எழுதியிருக்காரு. அந்த நிலையை அவர் மாற்றிக்கொண்டால் தி.மு.கவின் எதிர்ப்பு கடுமையாகவே இருக்கும்னு சொல்லி யிருக்காரு.'' 

""ம்...… கூட்டணி விஷயத்துக்கு வருவோம். பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கை சமாளிக்கிறதுக்காக ப.சி. மூலமாகத்தான் காங்கிரஸ் தலைமையை ஜெ. தொடர்பு கொள்றாருங்கிறதையும் இதற்கு கவர்னர் ரோசய்யா துணையா இருக்காருங்கிறதையும் நம்ம நக்கீரன் டீடெய்லா எழுதியிருந்தது. அதோடு, இதுவரை ப.சி. சம்பந் தப்பட்ட அரசு நிகழ்ச்சிகள் எதுவா இருந்தாலும் அ.தி.மு.க. அமைச்சர்கள் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவே மாட்டாங்க. ஆனா, சமீபத்தில் சிவகங்கையில் ஸ்பைசஸ் பார்க் திறப்புவிழாவுக்கு ப.சிதம்பரம் வந்தப்ப தமிழக அமைச்சர்களையும் ஜெ. அனுப்பி வைத்திருந்தார். காங்கிரசோடு ஜெ. நெருங்கி வரும் நிலையில், தி.மு.க.வோடு மீண்டும் கூட்டணி அமைக்கும் நோக்கத்தில் கலைஞருக்கு தீபாவளி வாழ்த்து சொல்லியிருக்காரா ப.சி?''

""ஜெ.வைப் பொறுத்தவரை, தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள 40 எம்.பி. தொகுதிகளில் அதிக இடங்களை அ.தி.மு.க. ஜெயிக்கணும். அப்புறம், மத்தியில் உள்ள நிலைமையைப் பொறுத்து தன்னோட முடிவை எடுப்பதுன்னு இருக்காரு. காங்கிரஸ் கட்சியைக்கூட தேர்தலுக்குப் பிறகு ஆதரிப்பதாகத்தான் டீலிங். காங்கிரசோ இந்த டீலிங்கில் நம்பிக்கை வைக்கலை. தி.மு.க.ன் னா நம்பிக்கையான கூட்டாளியா இருக்கும்னு நினைக்குது. ஆனா, தி.மு.க.வுக்குள்ளேயே மோடி ஆதரவு மனநிலை ஒன்றும் உருவாகி வருவதை ஸ்மெல் பண்ணியிருக்குது காங்கிரஸ் மேலிடம். அதனால்தான் ப.சி. பேச வந்திருந்தாரு. ஆனா, கூட்டணி சம்பந்தமா கலைஞர் பிடி கொடுக்கலை யாம். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில் தான் களம் தெளிவா இருக்கும். அப்ப பார்த்துக் கலாம்னு இருக்காராம்.''

""தீபாவளி கொண்டாடாத கலைஞருக்கு ப.சி தீபாவளி வாழ்த்து சொன்னதன் பின்னணியில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?''

""தீபாவளி கொண்டாடப்பட்ட இடங்களில் எவ்வளவு விஷயங்கள் இருந்ததுன்னு சொல்றேங்க தலைவரே... அ.தி.மு.க மந்திரிகள் பலரும் தீபாவளியை அமர்க்களப்படுத் திட்டாங்க. தேனி மாவட்டத்து ஒயின்ஷாப் பார் ஓனர்கள் மூலமா ஓ.பி.எஸ். ஏரியாவுக்கு 67 எல் வந்திருக்குது. மேலும் 33 எல் சேர்த்து பெரிய ஒரு ரூபாய்க்கு தீபாவளி பரிசுகளை கட்சிக்காரங்களுக்கு பெரிய குளம் லட்சுமிபுரம் பால் பண் ணையில் கொடுத்திருக்காரு ஓ.பி.எஸ்.  வரிசையா வந்துக்கிட் டேயிருந்த கட்சி நிர்வாகி களுக்கு பட்டாசு, ஸ்வீட் பாக்ஸ், பண கவர்னு நைட்டு 9 மணி வரை கொடுத்துக்கிட்டே இருந்தாராம். பொ.ப.து. மந்திரி கே.வி.ராமலிங்கம் ஈரோடு கெஸ்ட்ஹவுசுக்கு தன்னோட மாவட்ட கட்சி நிர்வாகிகளை வரவழைச்சு நல்லபடியா பரிசு கொடுத்திருக்காரு. விருதுநகர் மாவட்ட மந்திரி ராஜேந்திர பாலாஜி தன்னோட மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஒ.செ.க்கள், 7 ந.செக்கள், 10 பேரூர் செயலா ளர்களை சென்னையில் உள்ள பொ.ப.து. அமைச்சர் கே.வி.ஆர். அலுவலகத்துக்கு வரவைச்சி, அங்கே ஒரு எல், 2 எல்னு ஆளுக்குத் தகுந்தமாதிரி வெயிட்டா பரிசு கொடுத்து அனுப்பியிருக்காரு.'' 

""இன்னும் பல மந்திரிகள் இருக்காங்களே?''

""மந்திரி வைத்திலிங்கம் ஒரு கிளைச்செயலாளருக்கு மூன்று சிவப்பு நிற காந்தி தாள்னு கொடுத்தி ருக்காரு. மதுக்கூர் ஒன்றியத்தில் இருப்பவங்களுக்கு தன்னோட பி.ஏ.வும் பால் சொசைட்டி சேர்மனு மான காந்தி மூலம் கவர்களை அனுப்பியிருக்கிறார். காந்திக்கு எம்.பி. சீட் கிடைக்கத்தான் மந்திரி அடி போடுறாருங்கிறதைப் புரிஞ்சிக்கிட்ட மதுக்கூர் ஒ.செ.துரை.செந்தில், "கவரை எங்ககிட்டே கொடுங்க... நாங்க விநியோகம் பண்ணிக் கிறோம்'னு சொல்லி, காந்தியைத் திருப்பி அனுப்பிட்டாரு. டென்ஷனோடு காந்தி திரும்ப, அவரோட கார் ஒருவரை மோதித் தள்ள, மக்கள் சூழ்ந்ததால் பதட்ட மாயிடிச்சி. பாதிக்கப்பட்டவரை காந்தியே ஆஸ்பிட்டலுக்குக் கொண்டுபோய் நிலைமையை சமாளிச்சிருக்காரு.''

""புதுக்கோட்டைக்கு புது மந்திரி விஜயபாஸ்கர் கிடைச்சிருக்காரே, அவரோட தீபாவளி எப்படி?''

""ஆர்வக்கோளாறால் ஆதரவாளர்கள் யாராவது தன்னைப்புகழ்ந்து விளம்பரம் கொடுத்து கிடைச்ச பதவிக்கு வேட்டு வச்சிடப்போறாங்களோன்னு எல்லோரையும் கூப்பிட்டு, எந்த விளம்பரமும் வேணாம்ப்பான்னு சொல்லிட்டு சென்னைக்கு கிளம்பிட்டாரு. தீபாவளி ஸ்பெஷல் எதுவுமில்லை. மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தன்னோட மச்சானும் எம்.பி. சீட் கனவில் இருப்பவருமான கண்ணன் மூலமா தீபாவளி கவர்களைக் கொடுத்தாரு. கண்ணனோட வீட்டுக்கு வந்து கவர்களை வாங்கிய பலரும் நீங்கதான் அடுத்த எம்.பின்னு குஷிப்படுத்திட்டுப் போயி ருக்காங்க. போக்குவரத்து மந்திரி செந்தில்பாலாஜி, தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போனால் செலவாகும்னு சென்னையிலேயே இருந்துட்டாரு. உணவு மந்திரி காமராஜோ, புது டெண்டர் விடப்போறோம். அது ஃபைனலானதும் கவனிக்கிறேன்னு கட்சி நிர்வாகிகள்கிட்டே சொல்லி திடுக்கிட வச்சிருக்காரு. பால்வளம் மாதவரம் மூர்த்திதான் தீபாவளியை வித்தியாசமா கொண்டாடி யிருக்காரு. தன் தொகுதியில் உள்ள ஸ்கூல்களில் முதல் மூன்று ரேங்க் எடுத்த மாணவ-மாணவிகளை வரவெச்சி பரிசு கொடுத்ததோடு, உங்க படிப்புக்கு எப்போதும் உதவி செய்வேன்னு சொல்லி மாணவர்களையும் பெற்றோர்களையும் நெகிழ வச்சாராம்.''

""எல்லோருக்கும் ஒருநாள்தான் தீபாவளி. இடைத்தேர்தல் நடக்கிற ஏற்காடு தொகுதியில் தேர்தல் முடிகிற வரைக்கும் தீபாவளிதானே?''

""இடைத்தேர்தல்னா ஆளுங் கட்சித் தரப்பில்தான் உற்சாகம் கரைபுரளும். அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா மேலிட அனுமதியோடு நல்லநாள் பார்த்து ஒரு வழியா பிரச்சாரத்தைத் தொடங்கிட்டாரு. அக்டோபர் 30-ந் தேதியன்னைக்கு வாழப்பாடியில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மந்திரி எடப்பாடி பழனிச்சாமி, எம்.பி. செம்மலை, முன்னாள் அமைச்சர் பொன்னையன் உள்ளிட்டவங்க வந்தப்ப தேர்தல் விதிமுறைகளை மீறி பல கார்களில் பவனி வந்தாங்க. சைரன் வச்ச கார்கள், போலீஸ் பாதுகாப்புன்னு விதிகள் மீறப்பட் டது பற்றி தி.மு.க. தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியும் எந்த நடவடிக் கையும் இல்லை. தி.மு.க. வேட் பாளர் மாறன் மேலே விதிமீறல் புகார் வந்தப்ப அவர் முன்ஜாமீன் வரைக்கும் போகவேண்டியிருந்தது.''

""அதுதானே இடைத் தேர்தல்!''

""ஆமாங்க தலைவரே... ... எந்த விதிமீறல் பற்றியும் ஆளுந் தரப்பும் அதன் தலைமையும் கவலைப்படலை. ஏற்கனவே 52 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவில் புது அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட மேலும் 9 பேரை சேர்த்து 61 பேர் கொண்ட குழுவா ஜெ. மாற்றியிருக்காரு. இந்தக் குழுவில் 29 மந்திரிகள் இருக்காங்க. மொத்த முள்ள 290 பூத்களில் தலைக்கு 10 பூத் என பிரித்து, ஒவ்வொரு மந்திரியும் 7500 ஓட்டுகளை கவனிக் கணும்னு அசைன்மெண்ட் கொடுக் கப்பட்டிருக்குதாம். ஒரு ஓட்டு குறைஞ்சாலும் மந்திரி பதவி போயிடும்ங்கிற பயத்தோடு எல் லோரும் படுதீவிரமா வேலை பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க.''

""ஏற்காடு இடைத்தேர்தலில் ஜெ.வின் கவனமிருந்தாலும், சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிப் பதற்கு புது நீதிபதி நியமிக்கப் பட்டிருப்பதால அதில்தானே கூடுதல் கவனம் இருக்கும்?''


""அதிலென்ன சந்தேகம்... புது நீதிபதி ஜான்மைக்கேல் டி குன்ஹாவுக்கு 56 வயசு. ஹைகோர்ட் நீதிபதியா புரமோஷனாகும் வாய்ப்பு இருக்குது. அங்கே செல்லும்போது 62 வயது வரை பணியாற்றுவார். மங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞரான இவர் 2003-2004ல் நீதிபதிக்கான தேர்வு எழுதி பெங்களூரு ரூரல் கோர்ட்டில் நீதிபதியானார். அப்புறம், லோக் ஆயுக்தா கோர்ட்டில் 25வழக்குகளை விசாரித்தார். லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு முதல் ஆறாண்டுகள் வரை தண்டனை வழங்கியவர். தார்வார் மாவட்ட நீதிபதி, பெல்காம் மாவட்ட நீதிபதி, பெங்களூரு குடும்பநல நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி குன்ஹா, 2011ல் கர்நாடக ஹைகோர்ட் விஜிலென்ஸ் ரிஜிஸ்ட்ரார் ஜெனரலானார். இவர் விஜிலென்ஸ் ரிஜிஸ்ட்ரரா இருந்தப்ப கோர்ட்டில் லஞ்சம் கொடுக்க முயன்ற பல வக்கீல்கள் கைதாகி யிருக்காங்க. சொத்துக் குவிப்பு வழக்கின் புது நீதிபதியா மைக் கேல் டி குன்ஹா நியமிக்கப்பட்டிருப்பதை, சரியான சாய்ஸ்னு இதற்குமுன் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முடிகவுடரும் நீதித்துறை வட்டாரத்தினரிடம் சொல்லியிருக்காராம்.''

""இத்தனை பின்னணிகளைச் சொல்றியே... இதெல்லாம் ஜெ.வுக்கும் தெரிந்திருக்குமே... அவரோட அடுத்த மூவ் என்னவாம்?''

""அதை நான் சொல்றேன்... ... சுப்ரீம் கோர்ட்டில் ஜெ. தாக்கல் செய்துள்ள மனுவில் கர்நாடக காங்கிரஸ் அரசை மட்டுமில்லாமல், கர்நாடக ஹைகோர்ட்டையும் கேள்வி கேட்டிருக்கிறார். தனக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் எதிரா கர்நாடக அரசும் ஹைகோர்ட்டும் செயல்படு வதா குற்றம்சாட்டியுள்ள ஜெ., இந்த மனு மீதான விசாரணை தொடரும் நவம்பர் 15ந் தேதிக் காக காத்திருக்கிறார். விசா ரணை நடக்கும் போது, சொத்துக் குவிப்பு வழக்கை ஆந்திர மாநிலம் சித்தூருக்கோ அல்லது புதுச்சேரி மாநிலத்திற்கோ மாற்றணும்னு கோரிக்கை வைப்பது தொடர்பா மூத்த வக்கீல் கள்கிட்டே ஆலோ சனை நடத்தியிருக்காராம்.''  

ad

ad