புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2013

இந்திய அமைச்சரவையில் பிளவு – முடிவெடுக்கும் அதிகாரம் சோனியாவிடம்

கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், பங்கேற்பது தொடர்பாக, நேற்று நடந்த இந்திய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. எனினும் இதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல், காங்கிரஸ் தலைமையிடம் முடிவெடுக்கும் அதிகாரத்தை அமைச்சரவை ஒப்படைத்துள்ளது.

இன்று புதுடெல்லியில் நடக்கவுள்ள காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்வாரா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரக் குழு நேற்று, மாலை 5 மணியளவில் பிரதமர் இல்லத்தில் கூடி ஆராய்ந்தது.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக நடந்த இந்தக் கூட்டத்தில், மன்மோகன்சிங் கொழும்பு செல்வதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

அமைச்சரவைக்குள் இந்த விடயத்தில் ஒருமித்த கருத்து எட்டமுடியாடியாமல் போனதால், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் உயர்மட்டக் குழுவிடம் முடிவெடுக்கும் அதிகாரத்தை  ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாத இறுதியில், மன்மோகன்சிங் கொழும்பு செல்வதற்கு காங்கிரஸ் உயர்மட்டக் குழு ஒப்புதல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad