புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2013

பொதுநலவாய நாடுகளின் நெருக்கடியாலேயே இலங்கை தனக்கு விசா தர வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருப்பதாக செனல் - 4 ஆவணப்பட இயக்குநர் கெலம் மெக்கரே தெரிவித்தார்.
 
இலங்கை போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக இந்தியா கவலை கொண்டிருக்கலாம் என்பதை தான் அறிவதாக மேலும் தெரிவித்த மெக்கரே, இந்திய விசாவுக்கு தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருப்பேன் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.
 
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
இலங்கை போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக இந்தியா கவலை கொண்டிருக்கலாம் என்பதை நான் அறிவேன். ஆனால், கடந்த 3 ஆண்டுகாலமாக இதுதொடர்பாக நாங்கள் திரட்டியிருக்கும் ஆவணப்படங்களை வெளியிட ஏன் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.
 
இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் எனது கடவுச்சீட்டை கொடுத்திருந்தேன். விசா விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது என்ற குறிப்புடன் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக பலமுறை இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டேன். ஆனால், அங்குள்ள அதிகாரிகளிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. அத்துடன், இதுதொடர்பாக இந்திய தூதரகத்துக்கு மின் அஞ்சல்களையும் அனுப்பியிருக்கிறேன். இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு 2 கடிதங்களையும் அனுப்பி வைத்திருக்கிறேன்.
 
நான், ஆவணப்படங்களை வெளியிடுவதை இலங்கை தடுக்க முயற்சித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் கூட ஆவணப்பட திரையிடலுக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்தது. மலேசிய அரசுக்கும் இலங்கை அழுத்தம் கொடுத்தது. இதனால், ஆவணப்படத்தை வெளியிட ஏற்பாடு செய்த மனித உரிமைகள் ஆர்வலர் லேனா ஹென்ட்ரி கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இதேபோல், இந்தியாவுக்கும் இலங்கை அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று விரும்புகிறேன். பொதுநலவாய நாடுகளின் நெருக்கடியால் இலங்கை எனக்கு விசா தர வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் இந்திய விசாவுக்காக முயற்சிகளை மேற்கொள்வோம் என்றார்.

ad

ad