புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2013

முதலில் யாழ்ப்பாணம், அதையடுத்தே கொமன்வெல்த் – சவுத் புளொக்கின் புதிய சமரசத் திட்டம்.

கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பதற்கு, எதிர்ப்புகள் வலுத்து வருகின்ற நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றொரு புதிய சமரசத் திட்டத்தை, பிரதமர் செயலகத்திடம் முன்வைத்துள்ளதாக, சிஎன்என் – ஐபிஎன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

முதலில் யாழ்ப்பாணம் சென்று விட்டு, அதன் பின்னர் கொமன்வெல்த் மாநாட்டுக்கு செல்லலாம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.

முன்னதாக, கொமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்லும் போது, யாழ்ப்பாணத்துக்கும் செல்லலாம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு, பரிந்துரைத்திருந்தது.

எனினும், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரின் எதிர்ப்புகள் தணியாத நிலையில், முதலில் யாழ்ப்பாணம் சென்று விட்டு, கொமன்வெல்த் மாநாட்டுக்குச் சென்றால், இத்தகைய எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு ஆலோசனை முன்வைத்துள்ளது.

எனினும் இதுகுறித்து இந்தியப் பிரதமர் செயலகம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

அதேவேளை, இந்தப் புதிய திட்டம் குறித்து, இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சியின், உயர்மட்டக் குழு நாளை கூடி இதுபற்றி ஆலோசனை நடத்தவுள்ளது.

இதற்கிடையே, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் யாழ்ப்பாணம் செல்வதன் மூலம், தமிழ்மக்களின் புனர்வாழ்வு, மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான விவகாரங்களில் இந்தியாவுக்கு உள்ள பொறுப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும், சிறிலங்காவுக்கு இதுதொடர்பான தெளிவான சமிக்ஞையைக் கொடுப்பதாக இருக்கும் என்றும் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ad

ad