அண்மைய கிசு கிசு

பெர்சனல்!
நயன்தாராவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார் அவரின் மேக்-அப் மேன் ராஜு. நயனுடன் பிரபுதேவா லிங்க் ஆன பிறகு மேக்-அப்மேனின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. மீண்டும் ஸிங்கிள் ஆன நயன் மேக்-அப்மேனை பெர்சனல் மேனேஜராகவும் ஆக்கிக்கொண்டிருக்கிறாராம்.
"குட்டிப்புலி' டைரக்டர் முத்தையா இயக்கத்தில் "கடல்' கௌதம் கார்த்திக் நடிக்க ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தார் மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ. ஆனால் "கதையில் திருப்தி இல்லை' எனச் சொல்லி ஹீரோ ஆர்வம் காட்டவில்லையாம். இதனால் டைரக்டருக்கு கொடுத்திருந்த அட்வான்ஸை திரும்ப வாங்கிக்கொண்ட ராயப்பன், "சேட்டை' கண்ணன் இயக் கத்தில் விமல் நடிக்கும் படத்தைத் தொடங்குகிறார்.
சர்ச்சை கிளப்பும் படங்களை இயக்கிய சாமி, "கங்காரு' படத்தை இயக்கி வருகிறார். ஃபர்ஸ்ட் காப்பி புரொடியூஸர் சாமி. அவர் கேட்ட பட்ஜெட்டை கொடுத்துவிட்டார் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. இவர் "நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.' படத்தை தயாரித்தவர்.
பட்ஜெட்டைத் தாண்டி செலவாகியும் சாமி "கங்காரு'வை முடிக்காததால் லடாயாம். படத்தின் வசனகர்த்தாவை வைத்து படப் பிடிப்பை நடத்திவருகிறாராம் தயாரிப்பாளர்.
"கோச்சடையான்' தீபிகா படுகோனே இப்போது இந்திய சினிமாவின் நம்பர்-ஒன் ஸ்தானத்தில் இருக்கிறார். இந்த ஸ்தானத்தைத் தக்க வைத்துக் கொள்ள என்னென்ன உண்டோ... அத்தனையும் செய்கிறார். அதில் ஒன்று... பாடி மெயின்ட்டனென்ஸ்.
ஏற்கனவே நம்பர்-ஒன் ஸ்தானத்தில் இருந்த கரீனா கபூர் "பாடி பிட்னஸ்' பயிற்சியாளர் யாஸ்மின் இப்போது தீபிகாவுக்கும் பயிற்சியாளராக இருக்கிறார்.
தீபிகா இப்போது நடித்துவரும் "ஹேப்பி நியூ இயர்' படப்பிடிப்பு துபாயில் நடந்தது. தீபிகாவின் ஹோட்டல் ரூம் பில், சாப்பாட்டு பில் போக தினசரி 35 ஆயிரம் ரூபாய் வீதம் 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பில் ஒன்றையும் தயாரிப்பாளர் தலையில் கட்டினாங்களாம்.
அது என்ன பில்?
பாடி மெயின்ட்டனென்ஸுக்காக தினசரி 35 ஆயிரம் செலவு செய்யப் பட்ட பில்.
"விஸ்வரூபம்' முதல் பாக வசூலை விட பல மடங்கு வசூலை "விஸ்வரூபம்' இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்த்து... அதற்கான வேலையைச் செய்து வருகிறார் கமல்.
"நூறு கோடி ரசிகர்கள் உள்ள நாட்டில் நல்ல ரசனையான பொழுதுபோக்கு படம் தந்தால் ஆயிரம் கோடி வசூல் சாத்தியமே' எனச் சொல்லும் கமல், "விஸ்வரூபம்-2' ட்ரெய்லரை குறிப்பிட்ட சில சினிமா புள்ளிகளுக்கு போட்டுக் காண்பித்தாராம்.
"விஸ்வரூபம்-1' வியப்பா இருந்தது. ஆனா "விஸ்வ ரூபம்-2' முன்னாடி, முதல் பாகம் பெரிய விஷயமில்லை' என பார்ட்-2வை டுவிட்டரில் சிலாகித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இன்னொருபுறம் லிங்குசாமி தயாரிக்கும் கமல் நடிக்கும் "உத்தம வில்லன்' பட வேலையும் வேகமெடுத் திருக்கிறது. இதில் முதல் முதலாக கமலுடன் விவேக் நடிக்கிறார். சந்தானமும் உண்டு.
கொடுத்த கடனை வசூலிப்பதில் ஃபைனான்ஸியர் மதுரை அன்புவின் ஸ்டைல் ஏடாகூடமாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக விவகாரம் செய்வதில்லையாம் அன்பு. அதனால் வியாபாரம் களைகட்டியிருக்காம்.
தனுஷ், விஷால், லிங்குசாமி என பல பிரபலங்களும் அன்புவிடம் ஃபைனான்ஸ் வாங்குறாங்களாம்.

திருப்தி!

லடாய்!

பில்!

விஸ்வரூபம்-2

ஸ்டைல்!
கொடுத்த கடனை வசூலிப்பதில் ஃபைனான்ஸியர் மதுரை அன்புவின் ஸ்டைல் ஏடாகூடமாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக விவகாரம் செய்வதில்லையாம் அன்பு. அதனால் வியாபாரம் களைகட்டியிருக்காம்.
தனுஷ், விஷால், லிங்குசாமி என பல பிரபலங்களும் அன்புவிடம் ஃபைனான்ஸ் வாங்குறாங்களாம்.
உஷ்!
சினிமா டெக்னீஷி யன் அமைப்பு செகரட்டரி யும், எல்லா அமைப்புக்கும் தலைமை அமைப்பாக இருக்கும் "ஃபெப்'பின் பொறுப்பிலும் இருக்கும் "தனமில்க்' விருகை ஸ்டேஷ னில் தகராறு செய்ததையும், அதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயம் பட்டதையும் போன இதழில் கூவியிருந்தேன். போலீஸ் அட்டாக் பண்ணப் பட்ட விஷயத்தை போலீஸே மறைத்தது. இந்நிலையில் டெக்னீஷியன் அமைப்பு கணக்கு வழக்கில் "தன மில்க்' பிரச் சினையில் போலீஸ் செலவு 9 லட்சம் என எழுதியிருக்காங்களாம்.
|