புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2013




             ந்திய அரசியல்வாதிகள்மேல் கேளிக்கை வரி விதிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் அவர்களது சொல்லும் செயலும் எவ்வளவு துயரத்திலும் மக்களை மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன. எதற்கும் துணிந்துவிட்ட அவர்களது  பேச்சுக்கள் மக்களை முடிவற்ற கேளிக்கைகளுக்குள் ஆட் படுத்திக்கொண்டிருக்கின்றன. போன வாரத்தின் உச்சக்கட்ட காமெடி தேர்தல் சின்னங்கள் தொடர்பானவை. 
   nakkeeran nanry

மத்தியபிரதேசத்தில் தேர்தல் வருகிறது. இதற்கான பிரச்சாரங்கள் ஆரம்பித்துவிட்டன. இந்தப் பருவத்தில் அங்கு பல மாவட் டங்களில் குளங் களில் தாமரை மலர் பூத்துக் குலுங்குகிறது.   பா.ஜ.க.வின் தேர்தல் சின்னம் தாமரை. காங்கிரஸ் கட்சிக்கு இது மண்டையைக் குடைய ஆரம்பித்துவிட்டது. தாமரை பூத் திருப்பது பா.ஜ.க.வின் தேர்தல் சின்னத்தை நினைவூட்டுவது போல் இருப்பதால் தாமரை பூத்த தடாகங்கள் அனைத்தையும்  துணி கட்டி மறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இதை பா.ஜ.க.வினர் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளனர். “""காங்கிரசாரின் அறிவு சுத்தமாக திவாலாகி விட்டது.  தாமரையை மறைக்க வேண்டும் என்றால் கைச் சின்னத்தை எங்கே கொண்டுபோய் மறைப்பது? எல்லோரும் கையை தங்கள் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அலைய வேண்டுமா?''’என்று கேட்கிறார்கள்.

ஆனால் காங்கிரசாரின் வாதம் வேறு. ""உத்திரபிரதேசத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மாயாவதியின் அரசாங் கம் பூங்காக்களிலும் பொது இடங்களிலும் நிறுவியிருந்த யானைச் சிலைகளை மறைக்க வேண்டும் என்று தேர்தல் கமி ஷன் உத்தரவிட்டது. ஏனென்றால் யானை பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம். அந்த நியாயம் எங்களுக்குப் பொருந்தாதா? சுமார் நாற்பது தொகுதிகளில் தாமரை பெருமளவு பயிரிடப்பட்டிருக்கிறது. இது எங்க ளுடைய தேர்தல் வாய்ப்புகளை பாதிக்கக்கூடும். மேலும் 2008-ல் காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் மத்திய பிரதேசத் தில் நான்காம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தாமரைச் சின்னம் அச்சிடப்பட்டிருப்பதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தார். தலைமை தேர்தல் ஆணையர் இரண்டு வாரங் களுக்குள் அந்த சின்னங்களை அழிக்க உத்தரவிட்டார். இந்த முறையும் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்''’என்கிறார்கள் உறுதியாக.

தேர்தல் சின்னம் தொடர்பாக இவ்வளவு தீவிரமான பிரச் சினைகள் நடந்துகொண்டிருக்கும் ஒரு நேரத்தில் தமிழ்நாட்டில் இதற்கு நேர்மாறாக மிகப்பெரும் காமெடி நடந்துகொண் டிருக்கிறது. எந்த விதிமுறைகளைப் பற்றியும் கவலைப்படாமல் எந்த விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் இரட்டை சிலை சின்னத்தை தமிழக அரசின் அதிகாரபூர்வ சின்னமாக மாற்ற அ.தி.மு.க அரசு முயன்றுகொண்டிருக்கிறது. இது தொடர்பாக நடந்த வாக்குவாதங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. 

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதியில் இரட்டை இலைச் சின்னத்தை நிறுவியபோது அரசு செலவில் அமைக்கப்படும் ஒரு நினைவகத்தில் ஒரு கட்சி சின்னத்தை அமைக்கக் கூடாது, அதை அகற்ற வேண்டும் என தி.மு.க.வைச் சேர்ந்த சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கில் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனுக்கும் வழக்கை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமாருக்கும் இடையே நடந்த வாதப் பிரதிவாதங்கள் வரலாற்று புகழ்மிக்க நகைச்சுவை நாடகம்.

அட்வகேட் ஜெனரல் எம்.ஜி.ஆர். சமாதியில் உள்ளது இரட்டை இலை சின்னம் இல்லை என்று பிடிவாதம் பிடித்த போது நீதிபதி ""இந்த இரட்டை இலை நடுவில் ஏன் காம்பு உள்ளது?'' என்று கேட்டார். அதற்கு அட்வகேட் ஜெனரல் ""அது காம்பு இல்லை. அது ஒரு தூண்தான்'' என்றார். நீதிபதி அவரைப் பார்த்து ""நீங்கள் தாவரவியல் பாடம் படிக்க வில்லையா? காம்பு இல்லை என்று கூறுகிறீர்கள். காம்பு மாதிரியான தூண் என்று கூறுகிறீர்களா?''’என்று கேலி செய்தார். 

இந்த தந்திரத்தை அ.தி.மு.க.வினர் மாயாவதியிடம் இருந்துதான் கற்றுக்கொண்டார்கள். மாயாவதி அரசு அமைத்த யானைச் சிலைகள் தும்பிக்கையை உயர்த்திய நிலையில் உள்ளன என்றும் ஆனால் கட்சிச் சின்னமான யானை தும்பிக்கையை தாழ்த்திய நிலையில் வைத்திருக்கிறது என்றும் சாதித்தனர். கட்சிச் சின்னத்தில் இப்படி சின்னச் சின்ன தில்லு முல்லுகள் செய்து அதை எல்லா இடத்திலும் பரவச் செய்வதற்காக  அ.தி.மு.க அரசு அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு வருகிறது. அம்மா குடிநீர் பாட்டில்களில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டது. அதே போல முதல்வர் ஜெயலலிதா வின் தொகுதியான திருச்சி ஸ்ரீரங்கத்துக்கும் சென்னைக்கும் இடையே உணவகம், கழிவறை வசதியோடு இயக்கப்படும் கிளாசிக் பேருந்தின் இரு பக்கமும் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டுள்ளது. இப்போது தமிழக அரசால் இயக்கப்படும் "ஸ்மால்' பஸ்களிலும்  இந்த இரட்டை இலை வரையப்பட்டுள்ளது. இதற்கு தமிழக சட்டசபையில் தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இதற்கு அ.தி.மு.க தரப்பில் சொல்லப்பட்ட மறுப்புகள் பறக்கும் குதிரை விவகாரத்தையும் மிஞ்சிவிட்டன. அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அளித்த விளக்கம் சபையை நடுநடுங்க வைத்தது.

""பஸ்களில் இடம்பெற்றுள்ள வண்ணப் படங்கள் தமிழர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்த பல்வேறு இலைகளின் அடையாளம். அது கட்சி சின்னத்தைக் குறிப்பது அல்ல. வீட்டுக்கு விருந்தாளி வந்தால் உணவு தர படைப்பது வாழை இலை. உணவில் வாசத்தை ஏற்படுத் துவது கருவேப்பிலை. உணவாகவே சமைக்கப்படுவது கீரை இலை. சாப்பிட்ட பிறகு போடுவது வெற் றிலை. வீட்டு வாசலில் அலங்கரிப் பது மா-இலை. மனிதனின் நோய் போக்குவது துளசி இலை. இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்தது இலை. செடியில் இலை, கொடியில் இலை, மரத்தில் இலை என எங்கும் இலை, எதிலும் இலை…. கட்சி சின் னம் அல்ல: இந்த மண்ணின் மரபு சார்ந்த விஷயம் இலை. மண்ணை யும், மழையையும் காப்பது மரம். மரத்தின் அங்கமாக திகழ்வது இலை. மரமும் இலையும் இல்லை என்றால் காற்று இல்லை. காற்று இல்லை என்றால் பசுமை இல்லை'' கேட்ட வர்களுக்கு தலை கிறுகிறுத்துவிட்டது.

இந்திய குடியரசுக் கட்சியின் வேட்பாளர் செ.கு. தமிழரசன் தன் பங்கிற்கு “ஸ்மால் பஸ்களில் இருப் பது இரட்டை இலை இல்லை அது இயற்கை சீனரி’’என்று அடித்து விட்டார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலு எதிர்ப்பு தெரிவித்த போது அவரைப் பற்றி அ.தி.மு.க. அமைச்சர் கே.பி. முனுசாமி பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் தரக்குறைவானவை. 

சிலர் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் திட் டங்களுக்கு கலைஞரின் பெயர் வைக்கவில்லையா என்று கேட்கிறார்கள். அரசின் ஒரு திட்டத்திற்கு மாநில முதல்வரின் பெயரை வைப்பதற்கும் அவரது கட்சியின் சின்னத்தை பயன்படுத்து வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரு மாநில முதல்வர் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தக் காரர் அல்ல. அவர் அனைத்து தரப்பு மக்களுக் காகவும்தான் பொறுப்பேற்கிறார். அந்த வகையில் அவரது பெயர் என்பது ஒரு குறிப்பிட்ட தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்ல முடியாது. ஆனால் கட்சிச் சின்னம் என்பது திட்டவட்ட மாக ஒரு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவது. அந்தக் கட்சியின் சின்னத்தை அரசாங்கச்  செலவில் மக்களின் வரிப்பணத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டத்தில் பயன்படுத்துவது தார்மீக நெறிமுறைகளுக்கும் ஜன நாயக நெறிமுறைகளுக்கும் முற்றிலும் எதிரானது. தேர் தல் ஆணையமும் நீதி மன்றமும் உடனடியாக இதில் தலையிடாவிட்டால் ஒரு அரசாங்கமே ஒரு கட்சியின் கிளைபோல் ஆகிவிடும் அபா யம் இருக்கிறது. (ஏற்கனவே எல்லா விஷயத்திலும் அப் படித்தானே நடந்து கொண்டி ருக்கிறது என்கிறீர்களா?)

அது தமிழர் இலை, இயற்கைக் காட்சி என்பதெல்லாம் சட்டத்தையும் மக்களை யும் எள்ளி நகையாடும் செயல். ஒரு அரசாங்கம் இதை செய்வது அவமானகரமானது. இரண்டே இரண்டு இலை தான் பசுமையின் அடையாளமா? தமிழர்கள் பொங்கல் வைத்து சூரியனை வணங்குகிறார்கள். இவர்களுக்கு தமிழர் பண்பாடுதான் முக்கியம் என்றால் தமிழர் பண்டிகையில் வணங்கும் உதய சூரியனை அல்லவா எல்லா இடத்திலும் வரைந் திருக்க வேண்டும்? இப்படியும் சொல்லலாம். இந்த ஆட்சியில் பசுமை எல்லாம் அழிந்துபோய் இரண்டு இலை மட்டுமே மிஞ்சியிருக்கிறது என்று. 

எல்லாவற்றையும்விட கொடுமை ஒரு கட்சி தனது சின்னத்தையே தன்னுடையதல்ல என்று  பொய் சொல்வது. இலட்சக்கணக்கான தொண் டர்கள் இரட்டை இலைச் சின்னத்தை மார்பில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்கள். இது அவர் களுக்குச் செய்யும் துரோகம்.  இந்த நாடகங் களை ஒரு முதல்வர் ரசிப்பது தான் துயரமானது. சட்டசபையில் நடந்த சம்பவங்கள் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தக்கூடியவை. 

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் ""ஒருவர் கோயம்பேட்டில் பட்டாசுக் கடை திறந்தார். அங்கே போணியாகவில்லை. உடனே டெல்லிக்கு போய் கடைபோட்டார். அதிலும் வியாபாரம் நடக்கவில்லை''’என்று விஜயகாந்தை இழிவு படுத்திப் பேசினார். அத்தோடு நிற்கவில்லை. கலைஞர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டு தள் ளுவண்டி’ என்றும் அழைத் தார். அவருக்கு ஊக்கப் பரிசாக மறுநாளே  சுகா தாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இப்படி தன் கட்சி எம்.எல். ஏக்கள் தரக் குறைவாக பேசும்போது ஒரு முதல்வர் ரசித்து மகிழ்வதும் அவர்களுக்கு பதவிகளை பரிசளிப்பதும் சட்டமன்ற நடவடிக்கைகளை முழுக்க ஆபாசமும் வன்முறையும் நிறைந்ததாக மாற்றிக்கொண் டிருக்கிறது.

ஒரு கட்சியின் மூன்றாம் தர பேச்சாளர்கள் தெரு முனைக் கூட்டங்களில் பேசுவது போல அமைச்சர்களோ எம்.எல்.ஏக்களோ சட்டமன் றத்தில் நின்று பேசுவது அவ மானகரமானது. ஆனால் அவர்களின் நோக்கம் எதிர்க் கட்சிகளை அவமானப்படுத் துவது மட்டுமல்ல, வேறொரு தந்திரமும் இருக்கிறது. தமிழ கத்தின் முக்கியமான பிரச் சினைகள் குறித்தோ அல்லது ஆளும் கட்சியின் செயல் பாடுகள் குறித்தோ எதிர்க் கட்சிகள் விமர்சனங்களை எழுப்பும்போது அந்த விவா தங்களை திசை திருப்பி சீர் குலைப்பதுதான் அவர்களின் திட்டம். ஒரு தே.மு.தி.க எம்.எல்.ஏ. தாது மணல் கொள்ளை பற்றி பேச ஆரம்பித்தால் உடனே விஜயகாந்தின் மீது பதிலுக்கு தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டியது. உடனே அந்த பிரச்சினை திசை திருப்பப்பட்டு தே.மு.தி.க.வினர் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றுவார்கள். உடனே சட்ட சபையிலிருந்து வெளியேற்றுவது சஸ்பெண்ட் செய்வது என்று வழக்கமான நாடகங் களை ஆடவேண்டியது. இதற்காகத்தான் கலை ஞரைப் பற்றிய இழிசொற்களும் கூறப்படுகின்றன. 

ஒரு சிறிய தவறை இன்னொரு பெரிய தவறு செய்து மறைக்கும் கலையில் இந்த ஆட்சி யாளருக்கு இருக்கும் தைரியமும் திறமையும் வேறு எந்த ஆட்சியாளருக்கும் இல்லை.


 உஷ்!

விழு மாவட்ட ஆட்சிஅதிகாரியின் முகாமில் தீபஒளிக்கு மறுநாள் இரவு, இரு காக்கி பெண்களுக்கு வேலை. 11 மணி தாண் டியதும் ஒரு பெண் மீது பாலியல் தாக்குதல் முயற்சி நடக்க... இருவரும் அபாயக் குரல் கொடுக்க... சம்பந்தமான அதிகாரி, வெளியில் வந்து அதிர்ந்து போனார். மாவட்ட, சரக காக்கிகளுக்கு விவரம் போக, "எப்படியாவது வெளியில் தெரியாம அமுக்கிடுங்க'’ என இறைஞ்சுகிறாராம் சரகம். கொடுமை என்னன்னா... வில்லனுக்குப் பெயர் சீத்தாராமன்.

ad

ad