புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2013

முரளி ஹார்­மனி கிண்ண இரு­பது–20 கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறு­திப்­போட்­டியில் இன்று கொழும்பு சென்.பீற்றர்ஸ் கல்­லூரி அணியும் – கண்டி புனித திரித்துவக் (ரினிட்றி ) கல்­லூரி அணியும் பலப்­ப­ரீட்சை நடத்­த­வுள்­ளன.
கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் பி.ப. 1.30 ஆரம்­ப­மாகும் இப்­போ ட்­டியில் நடப்­பாண்­டுக்­கான கிண்­ணத்தை கைப்­பற்­றப்­போகும் அணி எது என்­பது பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
 
நடப்­பாண்­டுக்­கான முரளி ஹார்­மனி கிண்ண இரு­பது-20 கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி கடந்த முதலாம் திகதி ஆரம்­ப­மா­னது. வட­மா­கா­ணத்தின் 5 இடங்­களில் நடை­பெற்று வரும் இச்­சுற்­றுப்­போட்­டியில் அகில இலங்கை ரீதி­யாக கள­மி­றங்­கிய 12 அணி­களும் 3 பிரி­வு­க­ளாக பிரிக்­கப்­பட்டு முதல் கட்ட போட்­டிகள் நடை­பெற்­றன.
 
ஒவ்­வொரு பிரி­வு­க­ளிலும் முத­லிடம் பெற்ற அணிகள் நேர­டி­யாக அரை­யி­று­திக்கு தகுதி பெற்­ற­துடன், மூன்று பிரி­வு­க­ளிலும் இரண்டாம் இடத்தில் இருந்த அணி­களில் நிகர ஓட்ட விகித அடிப்­ப­டையில் முன்­னி­லை­யி­லி­ருந்த அணியும் அரை­யி­று­திக்குத் தகுதி பெற்­றது.
 
இத­ன­டிப்­ப­டையில் 'சி' பிரிவில் முத­லிடம் பெற்ற கொழும்பு சென்.பீற் றர்ஸ் கல்­லூரி, 'டி' பிரிவில் முத­லிடம் பெற்ற தர்­ம­சோக கல்­லூரி, 'ஈ' பிரிவில் முத­லிடம் பெற்ற கண்டி ரினிட்றி கல்­லூரி, மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்­கான அமைப்பின் சீனி­கம அணி ஆகி­யன அரை­யி­று­திக்குத் தகுதி பெற்­றன.
 
இந்­நி­லையில் அரை­யி­று­திப்­போட்­டிகள் நேற்று முல்­லைத்­தீ­விலும் கிளி­நொச்­சி­யிலும் நடை­பெற்­றன. முல்­லைத்­தீவு மகா வித்­தி­யா­ல­யத்தில் நடை­பெற்ற முத­லா­வது அரை­யி­று­திப்­போட்­டியில் தர்­ம­சோக கல்­லூரி- அணி நிர்­ண­யித்த 129 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்த ரினிட்றி அணி இறு­திப்­போட்­டியை உறுதி செய்­தது.
 
இதே­வேளை, கிளி­நொச்­சியில் நடை­பெற்ற 2 ஆவது அரையிறுதியில் சீனிகம அணியை 44 ஓட்டங்களுக்குள் சுருட்டிய சென்.பீற்றர்ஸ் அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து அவ்விலக்கை அடைந்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ad

ad