புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2013

மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ரயில் பெட்டிக்குள் சென்று பார்வையிட்டார் ஜெயலலிதா
 

சென்னை நகரில் போக்குவரத்து வசதியை விரைவுபடுத்துவதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் ரூ. 14 ஆயிரத்து 600 கோடி செலவில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. 
முதல் கட்டமாக அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோயம்பேடு
– பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகள் கடந்த ஜூலை மாதம் சென்னை வந்து சேர்ந்தது. அந்த ரெயில் பெட்டிகள் கோயம்பேடு பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயிலை இயக்குவதற்கான மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. ரெயில் பெட்டிகளின் தரம் பாதுகாப்பு இயக்கம் போன்ற சோதனையிடப்பட்டன.
பிரேசில் நாட்டு பொறியாளர்கள் தங்கள் ஆய்வுப் பணியை சென்னை மெட்ரோ ரெயில் பொறியாளர்களுடன் இணைந்து செய்தனர். ரெயில் என்ஜின்களை இயக்குவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மெட்ரோ ரெயிலின் முறைப்படியான சோதனை ஓட்டம் 06.11.2013 புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.
முதல் – அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த அதிகாரிகளும், ஊழியர்களும், பணியாளர்களும் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
முதல் – அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததும் 4 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில் ஓடத் தொடங்கியது. பணிமனையில் அமைக்கப்பட்டு இருந்த 800 மீ.தூர தண்டவாளத்தில் ஓடி நின்றது. மெட்ரோ ரெயில் இயங்கும் முறை மற்றும் நவீன வசதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். ரயில் பெட்டிக்குள் சென்று ஜெயலலிதா பார்வையிட்டார். 

சோதனை ஓட்டத்துக்காக மெட்ரோ ரெயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. கோயம்பேடு பணிமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு வேலிக்கு வெளியே மெட்ரோ ரெயில் ஓடுவதை காண ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர்.

ad

ad