புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2013

அவசரமாக திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
 






 


முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை நினைவு கூறும் விதமாக உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் தஞ்சை விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டது. 
கட்டுமானப் பணிகள் தொடங்கிய காலத்தில் இருந்தே தடைகள் ஏற்பட்டது. இப்போது கட்டுமானப்பணிகள் முடிவுற்ற நிலையில் நவம்பர் 8ந் தேதி மாலை 5 மணிக்கு திறப்பு விழா நடைபெறும் என்றும், பழ.நெடுமாறன் திறக்கிறார் என்றும் அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டது.

இந்த முற்றம் திறப்பதில் சில சிக்கல்கள் உருவான நிலையில் செவ்வாய்க்கிழமை மதுரை உயர்நீதிமன்ற கிளை முற்றம் திறக்க அனுமதி அளித்தது.
இந்த நிலையில் மேலும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் வேறு தடைகள் வந்து திறப்பு விழாவை தடை செய்து விடலாம் என்று எண்ணிய விழாக் குழுவினர், புதன்கிழமை காலை 11 மணிக்கு பழ.நெடுமாறனை வைத்து திறந்தனர். விழாவில் எம்.நடராஜன், பெ.மணியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரமாண்டமாக நடக்க வேண்டிய திறப்பு விழா ரகசியமாக திறக்கப்பட்டுவிட்டது உலகத் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திறப்பு விழாவிற்காக மாணவர்கள் சுடர் ஏந்தி வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

- செம்பருத்தி

ad

ad