அஜீத் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்
சரத்குமார் மகள்

சிம்புவுடன் ‘போடா போடி’, விஷாலுடன் ‘மதகஜராஜா’ ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நடிகை வரலட்சுமி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள். இவர் விஷாலுடன் நடித்த ‘மதகஜராஜா’ படம் பல்வேறு பிரச்சினைகளால் வெளிவர முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஷாலின் ‘பாண்டிய நாடு’ படம் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டி ருக்கிறது. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விஷாலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தி ருந்தார். அதாவது, விஷால், அஜீத், கார்த்தி ஆகியோரின்மூன்று படங்களையும் போட்டு, ‘இந்த தீபாவளிக்கு வின்னர் விஷால்’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதைப் பார்த்த அஜீத் ரசிகர்கள் கடுப்பாகி வரலட்சுமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை தாறுமாறாக திட்டி கருத்து வெளியிட்டிருந்தனர். இதனால் பயந்துபோன வரலட்சுமி, தான் வெளியிட்டிருந்த கருத்தை நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக அஜீத் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அஜீத் ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த போட்டோவை யாரோ ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். அதை நானும் அப்படியே போட்டுவிட்டேன். நானும் ‘தல’ ரசிகைதான். ‘தல‘ ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். என்று குறிப்பிட்டிருந்தார்.