புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2013

வரவு-செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு

99 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேறியது

2014 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 55
வாக்குகளும் அளிக்கப்பட்டன. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று மாலை 5.00 மணிக்கு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்றது.
இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக ஜ. ம. சு. மு. வில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ், ஈ. பி. டி. பி., இ. தொ. கா., ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, அடங்கலான சகல கூட்டுக் கட்சிகளும் வாக்களித்தன.
எதிராக ஐ. தே. க., தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக தேசிய முன்னணி என்பன வாக்களித்தன. 2014 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் படி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டு மணி நேரங்களுக்கு மேல் அவரின் உரை இடம்பெற்றது. இந்த நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று மாலை வரை இடம்பெற்றது.
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஏழு நாட்கள் நீடித்தது. நீண்ட காலத்தின் பின் எதிர்த்தரப்பு சார்பாக எதிர்க் கட்சித் தலைவர் விவாதத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஆளும் தரப்பு சார்பாக பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.
கடந்த 7 தினங்களில் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள் கருத்துக்களை வெளியிட்டனர். இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் விவாதத்தின் இறுதியில் ஆளும் தரப்பு சார்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பதிலளித்து உரையாற்றினார். இரண்டாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்த்தரப்பு சார்பில் கோரப்பட்டதையடுத்து வாக்கெடுப்பு இடம்பெற்றது.
குழு நிலை விவாதத்தின் முதல் நாளான எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி, பிரதமர் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகம் என்பன தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. இறுதி நாளான டிசம்பர் 20 ஆம் திகதி நிதி அமைச்சு மீதான விவாதம் நடத்தப்படும். மாலை வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

ad

ad