மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்காதது வட மாகாண மக்களுக்கு ஏமாற்றம் தரும் செயல்
மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டங்களுக்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவரை சார்ந்தவர்களும் கலந்து கொள்ளாதமை வட மாகாண மக்களின் கனவுகளுக்கு மாறான செயலாகு
ம் என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் மேம்பாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வடக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாரிய அபிவிருத்தி இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தெரியும் என்றாலும் தமது அரசியல் இலாபத்திற்காக அவர்கள் அதனை மறுக்கின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மக்கள் தமக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை திட்டமிட்டு நிராகரிக்கும் வஞ்சகத்தை கூட்டமைப்பினர் செய்கின்றனர் என்பதை மக்கள் மீண்டும் உணரத் தொடங்கியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஏழாவது நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொடர்பில் அனைவரும் அறிவார்கள். அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சு.ம.சி. என்ற சிந்தனை உள்ளது. சுத்து மாத்து சிந்தனையே இதன் கருத்தாகும் என்றார்.