புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2014

பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவு: தேர்தல் அதிகாரிகள் நாளை பணியில்

மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், பிரசாரப் பணிகள் யாவும் இன்று (26) நள்ளிரவு 12
மணியுடன் முடிவுக்கு வருகின்றன.
தேர்தல் விதிமுறைகளுக் கமைய தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்பு பிரசாரப்பணிகள் யாவும் நிறைவடைய வேண்டும். ஊடகங்களுக்கூடான விளம்பரங்கள், அறிக்கைகள், அறிவித்தல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள அதேநேரம், வேட்பாளர்களின் மாவட்ட அலுவலகம் மற்றும் வீட்டில் அமைந்துள்ள அலுவலகங்களில் பிரசாரப் பதாகைகள், சுவரொட்டிகள் அல்லது சோடனைகளையும் காட்சிப்படுத்த முடியாது. 27ஆம் திகதி காலை முதல் இவ்வாறான இடங்களைப் பரீட்சிப்பதற்கு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு குழுவொன்று சமுகமளிக்குமெனவும் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களும் அரசாங்க அதிகாரிகளும் நாளை மாலை முதல் தமக்கு வழங்கப்பட்டுள்ள பிரதேசத்திற்கு கடமை நிமித்தம் செல்லவுள்ளனர்.
இம்முறை தேர்தலில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸாரும் சுமார் 75 ஆயிரத்துக்கு அதிகமான அரசாங்க உத்தியோகத்தர்களும் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக இரண்டு மாகாணங்களிலிருந்தும் 608 நிலையங்கள் வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு விநியோக நிலையங்களாகவும் வாக்கு எண்ணும் நிலையங்களாகவும் பிரகடனப்படுத்த ப்பட்டுள்ளன.
தேர்தல் கடமையில் ஈடுபடும் அதிகாரிகளில் தங்குமிட வசதிகள், வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களை கருத்திற்கொண்டு இரண்டு மாகாணசபைகளினது அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 28ஆம் திகதியன்று விசேட விதிமுறை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களான றோயல் கல்லூரி, டீ. எஸ். சேனாநாயக்க மற்றும் இசிபத்தான கல்லூரி ஆகிய 27, 28 ஆகிய இரு தினங்களும் மூடப்பட்டிருக்கும். கம்பஹாவில் வாக்கு எண்ணும் பிரதான மத்திய நிலையங்களான வேயங்கொடை பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயம் சியனே தேசிய கல்விக் கல்லூரி ஆகியன கடந்த 24ஆம் திகதியன்றே மூடப்பட்ட அதேவேளை அவை மீண்டும் ஏப்ரல் 02 ஆம் திகதியன்று மீள திறக்கப்படவுள்ளன.
ஹம்பாந்தோட்டையின் பிரதான கணக்கெடுப்பு மத்திய நிலையமான குச்சி தேசிய பாடசாலை இன்று (26) முதல் 28ஆம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும்.
இதேவேளை, கடமை உத்தியோகத்தர்கள் தங்குவதற்காக ஹிபிடகம தேசியக் கல்விக் கல்லூரி, காலி சவுத்லண்ட் வித்தியாலயம் ஆகியன 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும். இவர்களுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறு கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ad

ad