புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2014

தாய்மார்களின் கண்ணீருக்கு டாஸ்மாக் கடைதான் காரணம்: வைகோ

விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியின் சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் போட்டியிடுகிறார். அதனால், இப்பகுதியில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி
கட்சியினருடன் தீவிர பிரசாரமும் மேற்கொண்டு வருகிறார்.


இந்நிலையில் செவ்வாய்கிழமை மாலையில் சூலைக்கரையில் பொதுமக்களிடம் தனக்கு ஆதரவு அளிக்கக் கோரி வைகோ பேசியபோது,  ‘’ தமிழகத்தில் உள்ள தாய்மார்களின் கண்ணீருக்கு காரணம், அரசு நடத்தும் டாஸ்மாக் கடைதான்.  இதனால், இளைஞர்களும் சீரழிந்து வருகிறார்கள் என்பதை அறிந்து வேதனை அடைகிறேன். இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காக கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காகவும் 1500 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டேன். அப்போது கிராமங்களில் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் வரவேற்றார்கள்.
நான் இப்பகுதியில் என்னென்ன நலத்திட்டங்கள் செய்திருக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இளைஞர்கள் அனைவரும் உங்களை வேட்பாளர் எனக் கருதி ஆதரவு கொடுங்கள். உங்களுக்காகவும், இத்தொகுதியின் வளர்ச்சிக்காகவும் நேர்மையான முறையில் பணியாற்றுவேன். இன்றைய இளைஞர்களுக்கு உலக நடப்புகள் அனைத்தும் தெரியும். அதனால், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வருகிற தகவல்கள் பற்றி உங்கள் குடும்பத்தாரிடம் எடுத்துக் கூறி வாக்களிக்கச் சொல்லுங்கள்’’ என இளைஞர்களை வைகோ கேட்டுக் கொண்டார்.
அதற்கு முன்னதாக என்.ஜி.ஓ காலனி, சூலக்கரை மேடு, மீசலூர், மருளூத்து, கூரைக்குண்டு, தாதம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரசாரம் செய்தார். அப்போது, உடன் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் உடன் சென்றனர்.

ad

ad