26 மார்., 2014

திமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. பிரச்சாரம்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணணை ஆதரித்து மாபா பாண்டிய ராஜன் எம்.எல்.ஏ. விருதுநகர் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பாண்டியன்
நகரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய எம்.எல்.ஏ. நகரின் பல பகுதிக்கு சென்று பிரசாரம் செய்த பின்னர் பாத்திமா நகரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.


பிரச்சாரத்தின்போது வேட்பாளர் ராதா கிருஷ்ணன் பேசும் போது, விருதுநகர் ராமமூர்த்தி ரோடு ரெயில்வே மேம்பால திட்டப்பணி முடங்கி உள்ளதற்கு சாத்தூர் ராமச்சந்திரன் தான் காரணம் என்றும், நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்னுடைய முதல் வேலையே இந்த நகரில் அந்த பாலதிட்டப்பணியை நிறை வேற்றுவதுதான் என்று குறிப்பிட்டார்.
பிரசாரத்தின் போது விருதுநகர் யூனியன் தலைவரும், தொகுதி செயலாளருமான கலாநிதி, துணைத் தலைவர் மூக்கையா, நகரசபை தலைவர் சாந்தி, அ.தி.மு.க. நகர செயலாளர் நைனார் முகமது மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.