புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2014

இலங்கைக்கு எதிரான பிரேரணை - நாளை அரச தரப்பு விவாதம்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள அறிக்கை தொடர்பில் நாளை விவாதம் இடம்பெறவுள்ளது
ஜெனீவா நேரப்படி முற்பகல் 9 மணி முதல் 12 மணிவரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.
இதன்போது இலங்கை அரசாங்க பிரதிநிதிகளால் தமது சார்பு கருத்துக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்கு எதிரான அமரிக்காவின் யோசனை நாளை மறுநாள் முன்வைக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் 25 வது அமர்வில் அமரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள யோசனையின் புதிய திருத்தத்தின் அடிப்படையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு வருட கால சர்வதேச விசாரணை காலம் நிர்ணயிக்கப்பபட்டுள்ளது.
இதற்கமைய ஒரு வருட காலப்பகுதிக்குள் விசாரணை அறிக்கை மனித உரிமை பேரவை அமர்வில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று யோசனையில் குறிப்பிட்டுள்ளது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள இறுதியான தீர்மான வரைபு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளிடம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நடத்திய காலப்பகுதியில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விரிவாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தை கேட்டுக் கொள்வதாக இந்த தீர்மான வரைபு அமைந்துள்ளது.
இந்த இறுதி வரைபின் முக்கியமான 8வது பந்தியில், குறிப்பிடத்தக்கதான இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக, விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் சிறப்பு நடைமுறைகளின் உதவியுடன், உண்மைகளை நிறுவி, மீறல்கள் இடம்பெற்ற சூழல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ad

ad