புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

நட்சத்திர சின்னம் கேட்டு வி.சி.க மனு: பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.  அதில்,  ‘’விடுதலை சிறுத்தைகள் கட்சி 1999–ஆம் ஆண்டு தேர்தல்
ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டது. 2006–ம் ஆண்டு முதல் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறோம்.


வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். திருவள்ளுர் தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளராக ரவிக்குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.
எங்கள் கட்சிக்கொடியில் நட்சத்திர சின்னம் உள்ளது. எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நட்சத்திரம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்தோம்.
ஆனால் இது வரை சின்னம் ஒதுக்கவில்லை. எனவே, எங்கள் கட்சிக்கு நட்சத்திர சின்னம் ஒதுக்கும் படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்’’என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னி ஹோத்ரி, நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இது குறித்து விசாரித்த நீதிபதிகள், ‘விடுதலை சிறுத்தைகள் நட்சத்திர சின்னம் கேட்ட மனு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலனை செய்ய வேண்டும். வருகிற 27–ந்தேதிக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தனர்

ad

ad