புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

விபூசிகாவை விடுவிப்பதற்காக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது! - கைது தொடர்பில் தகவல் தெரியாது ஐ.நாவில் கோஹன்ன
கிளி. தருமபுரத்தில் கைது செய்யப்பட்ட 13 வயதான விபூசிகாவையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சந்தேகநபராகவே தமது குற்றப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதனால் அவரை விடுவிப்பதற்காக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி தருமபுரத்தில் கடந்த 13 ம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, 13 வயதான விபூசிகா மற்றும் அவரது தாயார் ஜெயகுமாரி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரைத் துரத்திச் சென்ற போது, அவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தமை மற்றும் அவர்களுடைய வீட்டிலிருந்து, நிலத்தின் கீழ் இருப்பவற்றைக் கண்டறியும் கருவி மீட்கப்பட்டமை ஆகியன தொடர்பிலேயே ஜெயக்குமாரி மற்றும் மகள் விபூசிகா இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இவர்களைக் கைது செய்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் வவுனியாவில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு விட்டு, மறுநாள் 14ம் திகதி இரவு கிளிநொச்சி நீதிமன்ற பதில் நீதிவானின் வீட்டில் முற்படுத்தினர்.
அதனையடுத்து தாயார் ஜெயகுமாரியை 18 நாள் பூஸாவில் தடுத்து வைத்து விசாரிக்கவும், விபூசிகாவை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் பதில் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
இதன் பின்னர் இரு நாள் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டிருந்த விபூசிகா மீளவும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார்.
இதன் போது அவரை கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் தற்காலிகமாக தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
விபூசிகா இன்னமும் விடுவிக்கப்படாமையால் அவருக்காக கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சிலர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
விபூசிகாவின் கைது தொடர்பில் தகவல் தெரியாது என ஐ.நாவில் நழுவிய பாலித கோஹன்ன
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி டாக்டர் பாலித கோஹன்ன கடந்த வாரம் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகாவின் கைது தொடர்பில் லங்காசிறியின் செய்தியாளரிடம் கருத்துக் கூறாமல் நழுவியுள்ளார்.
இலங்கையின் இன்றைய நிலமை ஐ.நாவின் திட்ட வரைவு தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை கூறியதுடன் விபூசிகாவின் கைது தொடர்பில் கருத்துக்களை கூறாமல் நழுவியுள்ளார் பாலித கோஹன்ன.

ad

ad