புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மான இறுதி வரைபு வெளியானது
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள இறுதியான தீர்மான வரைபு இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளிடம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நடத்திய காலப்பகுதியில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விரிவாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தை கேட்டுக் கொள்வதாக இந்த தீர்மான வரைபு அமைந்துள்ளது.
இந்த இறுதி வரைபின் முக்கியமான 8வது பந்தியில், குறிப்பிடத்தக்கதான இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக, விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் சிறப்பு நடைமுறைகளின் உதவியுடன், உண்மைகளை நிறுவி, மீறல்கள் இடம்பெற்ற சூழல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பிலான அமெரிக்காவின் மூன்றவாது தீர்மான வரைவு வெளிவந்தது: 2002ம் ஆண்டு முதல் விசாரணை
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்கா தலைமையிலான கூட்டு நாடுகளினால் முனைவைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் மூன்றாவது வரைபு வெளிவந்துள்ளது.
வெளிவந்துள்ள இந்த தீர்மான வரைபே இறுதித்தீர்மான வரைபாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், வரும் வியாழக்கிழமை (27-03-2014) சபையில் வாக்கெடுப்புக்கு இது விடப்படலாம் என ஜெனிவாச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நடத்திய காலப்பகுதியில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விரிவாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தை கேட்டுக் கொள்வதாக இந்த தீர்மான வரைபு அமைந்துள்ளது.
இதன்பால் 2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு இறுதி யுத்த காலப்பகுதியே விசாரணைக்கு உட்படுத்தப்படும் காலவரையறையாகவுள்ளது.
வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்த தீர்மான வரைபின் 8வது பந்தியில், குறிப்பிடத்தக்கதான இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்வழி, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்கள் தொடர்பாக, விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் சிறப்பு நடைமுறைகளின் உதவியுடன், உண்மைகளை நிறுவி, மீறல்கள் இடம்பெற்ற சூழல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினை இத்தீர்மானம் கேட்டுக் கொண்டுள்ளது.
விசாரணைக்கான காலவெளியில் 1983ம் ஆண்டு முதல் விசரணைகள் நடத்தப்பட வேண்டும் என கனடா வாதிட்டிருந்தது. தற்போது உள்ளடக்கப்பட்டுள்ள காலவெளியின் ஊடாக மகிந்த ராஜபக்ச தலையிலான அரசாங்கத்தின் ஆட்சிக்காலமே கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதோடு, ஐ.தே.க அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் தவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

ad

ad