புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

திண்டுக்கல், தேனியில் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம்

ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் மற்றும் தேனி பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை
ஆதரித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் பிரசாரம் செய்கிறார்.


முதலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் உதயகுமாரை ஆதரித்து திண்டுக்கல்லில் பிரசாரம் செய்கிறார். இதற்காக திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி மின்சார வாரிய அலுவலகம் அருகேயுள்ள அங்குவிலாஸ் மைதானத்தில் பிரசார கூட்ட மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.
தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறும் மைதானத்தில் பாராளுமன்றம் மற்றும் செங்கோட்டை வடிவில் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதனை திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான நத்தம் விசுவநாதன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர்.
திண்டுக்கல்லுக்கு வருகை தரும் ஜெயலலிதாவுக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும்ஜெயலலிதா வரும் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக ஹெலிகாப்டர் இறங்கு தளமும் கூட்ட மேடை அருகே அமைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வரும்  ஜெயலலிதா பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மதியம் 2.30 மணிக்கு திண்டுக்கல் பிரசார கூட்ட மைதானத்திற்கு வருகிறார். அங்கு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் உதயகுமாரை ஆதரித்து,  ஜெயலலிதா பேசுகிறார். இந்த பிரசார கூட்டம் முடிந்ததும் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் தேனி மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.
ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு–ஆண்டிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் திடலில் தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பார்த்திபனை அறிமுகப்படுத்தும் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்கூட்ட மேடை அருகே உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு மாலை 4.30 மணிக்கு  ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் வருகிறார். அங்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு அவர் புறப்பட்டு செல்கிறார்.
ஆண்டிப்பட்டி அருகே பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் திடலில் பாராளுமன்ற முகப்பு போன்றும், டெல்லி செங்கோட்டை போன்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சாலையின் இருபுறமும் வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. பிரசார திடலில் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா உருவப்படத்துடன் கூடிய விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த முன்னேற்பாடு பணிகளை நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் நேற்று நேரில் பார்வையிட்டனர்.
 ஜெயலலிதா வருகையை முன்னிட்டு திண்டுக்கல் மற்றும் தேனியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன், ஐ.ஜி. சஞ்சய்மாத்தூர், டி.ஐ.ஜி. அறிவுச்செல்வம் ஆகியோர் மேற்பார்வையில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

ad

ad