புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

இன்றைய ஆட்ட  முடிவில் பயெர்ன் முன்சென் ஜேர்மனிய  சம்பியனாகுமா ?

ஜெர்மனியின் சமஸ்டி  லீக் முதற்தர கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் 27 வது சுற்றுப் போட்டி இன்று இடம்பெறும் .இதில் இன்று பயெர்ன் 9 வது தரவரிசையில் இருக்கும்
ஹெர்தா பெர்லினுடன் மோதி வெற்றி பெருமானால் இன்னும் மீதியாக 7 ஆட்டங்கள் விளையாட வேண்டி இருக்கும் போதே   முன்கூட்டியே சம்பியானகி வரலாறு பதிக்கும் .இதுவரை நடந்த 26 போட்டிகளில் இரண்டில் மட்டும் சமநிலை அடைந்து மற்ற 24 போட்டிகளிலும் வெற்றி பெற்று எந்த ஆட்டத்தில் தோல்வி காணாது 74 புள்ளிகளுடன்  அட்டவணையில் முதல் இடத்தில்  இருக்கும் இந்த சாதனைக் கழகம்  வென்றால்  பின்னே வரிசையில்  நிற்கும் மற்றைய கழகங்களால் முந்த முடியாத நிலை ஏற்படும் .அத்தோடு பல்வேறு சாதனை பதிவுகளும் எழுதப்படும் .இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் சம்பியனாகும். 2 ஆம் 3 ஆம் இடங்களில் இருக்கும் டோத்முண்டும் சால்கேயும் தமக்குள் இன்று மோதுகின்றன .இவை சமநிலை எடுக்கும் பட்சத்தில் பயெர்ன்  தோற்றாலும் சமநிலை அடைந்தாலும் இன்று சம்பியானகும், கணித கணிப்பீடு முறையில் மற்றைய முடிவுகள் கிடைத்தால் அடுத்தடுத்த போட்டிகள் வரை  பயெர்ன் காத்திருக்க வேண்டும் .கோல் வித்தியாசம் பயெர்னுக்கு +64 என்ற அதி உச்ச நிலை உண்டு.டோட்முன்ட் +30.சால்கே +14 ,ஆகவே பெரும்பாலும் இன்றே பயெர்ன்  சம்பியானகும் .சிலவேளை கணித அடிப்படை நிறுவலுக்காக காத்திருக்க வேண்டும் 

ad

ad