புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 மார்., 2014

கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு பண உதவி: தமிழக பொலிஸ்
சர்வதேச ரீதியில் கடன் அட்டை முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவர், பல லட்சக்கணக்கான ரூபாய்களை தமிழகத்தில் உள்ள
செங்கல்பட்டு மற்றும் திண்டுக்கல் முகாம்களின் இலங்கை அகதிகளுக்கு வழங்கியுள்ளதாக தமிழக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தின் ராமாபுரம் என்ற இடத்தில் குறித்த இலங்கையரும் அவரின் இரண்டு நண்பர்களும் கடந்த வெள்ளிக்கிழமை கைது  செய்யப்பட்டனர்.
இதன்போது இரண்டு நண்பர்களுக்கு கடன் அட்டை முறைகேடுகள் தொடர்பில் இலங்கையர் பயிற்சியளித்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சர்வதேச இன்டர்போல் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் ஜெயரட்ணம் என்ற இவர், மேற்கத்தைய நாடுகள் பலவற்றில் கடன் அட்டை முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று தமிழக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெ ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.