புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து ,சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) வாழ் புங்குடுதீவு மக்களுடனான கலந்துரையாடல்
இன்று 13.04.2014 ஞாயிறு மாலை 4மணியளவில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாகசபைச் செயலாளர் திரு.தர்மலிங்கம் தங்கராஜா தலைமையில் சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) வாழ் புங்குடுதீவு மக்களை இணைத்து புதிய நிர்வாகத்துடன் ஒரு கருத்துப் பரிமாறல் நடைபெற்றது. நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் செயற்குழு தெரிவும் நடைபெற்றது.
சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) செயற்குழு உறுப்பினர்களாக திரு.சீலன் -லீஸ், திரு. சிவம் -லீஸ், திருமதி.சி.வரதலக்ஸ்மி -புறூக், திரு. சண்முகம் ஆனந்தன் -பீல் இவர்களுடன் ஏற்கனவே ஆலோசனைச் சபையில் அங்கம் வகிக்கும் திரு. ஞானச்சந்திரன், திரு.சுதன், திரு. சிவகுமார், திரு.சதா இந்த எட்டுப்பேரும் செயலாளருடன் (திரு.தர்மலிங்கம் தங்கராஜா) இணைந்து ஏனைய சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) வாழ் புங்குடுதீவு மக்களையும் ஒன்றிணைத்து செயற்படுவோம் என உறுதி எடுக்கப்பட்டது.
சொற்ப அளவு மக்கள் கலந்து கொண்டாலும், அத்தனை பேரும் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய உறுப்பினர்களாக தம்மை இணைந்து கொண்டமை பெருமைக்குரியது. தொடர்ந்தும் ஆரோக்கியமாகவும் இனிதாகவும் நடைபெற்று, இரவு 8மணியளவில் கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.
இவ்வண்ணம்,
உண்மையுள்ள,
செயளாளர்.
த.தங்கராஜா.
தகவல்...
ஊடகப்பிரிவு,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து
