புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2014

காங்., –பாஜகவை நாட்டை விட்டு விரட்ட வேண்டும்: சீமான் பேச்சு

தஞ்சை திலகர் திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கு.பரசுராமனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு, நாம் தமிழர் கட்சியின்
ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது,


’’பெரியார், அம்பேத்கார் பிறந்த மண்ணில் பா.ஜ.க. எந்த தேர்தலிலும் வெற்றி அடைய முடியாது. 1967 – லில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி நம் நாட்டிற்கு என்று எதுவும் செய்யவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டுதான் வருகிறது. குறிப்பாக கல்வி, மருத்துவம் வியாபரமாகி விட்டது. தனியார்மயம், உலகமயமாக்குதல் என்று கூறி, நம் நாட்டில் உள்ள விவசாய நிலங்களை எல்லாம் அயல் நாட்டினருக்கு தாரை வார்த்து கொடுத்து வருகிற செயல் தான் காங்கிரஸ் ஆட்சியில் நடந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு என அனைத்து பொருட்களுக்கும் நாளுக்கு நாள் கொண்டு தான் உள்ளது. இதற்கு முழு காரணம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தான்.  ஈழத் தமிழர்களின் படுகொலையை முன் நின்று நடத்தியது காங்கிரஸ் கட்சி. இதற்கு துணையாக இருந்தது தி.மு.க. இந்தியாவின் வெளியுறவு கொள்கையை மத்திய அரசு ஆதரிக்கிறது. ஆனால் ஈழத்தில் தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்றால் மத்திய அரசு எதிர்க்கிறது.
இந்தியாவின் வெளியுறவு கொள்கை மாற்றத்தால்தான் நம் தேசத்தின் முழு விடுதலையை நாம் பெற முடியும். அப்போது தான் நம் நாட்டிற்கு என்று நாம் எதையும் செய்து கொள்ளமுடியும்.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. இதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மு.க.ஸ்டாலின்.
இந்த திட்டம் நிறைவேறினால் டெல்டா மாவட்டம் பாலைவனமாகி விடும் என்று கருதி, உச்சநீதிமன்றம் வரை சென்று தடுத்து நிறுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில், காவிரி, முல்லை பெரியாறு, கச்சத்தீவு, மீனவர்கள், மீத்தேன் எரிவாயு, ஈழ தமிழர் படுகொலை உள்ளிட்ட எந்த பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு காணப்படும் என்று குறிப்பிடப்படவில்லை.
பா.ஜ.க.வையும், காங்கிரசையும் இந்த நாட்டை விட்டு விரட்ட வேண்டும். இந்த 2 கட்சிகளின் நிலைபாடு ஒன்று தான். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டவர் ஜெயலலிதா. விவசாயிகளின் நலனில் அவர் அக்கரை கொண்டவர். எனவே, அவரின் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்.
இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கு. பரசுராமனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும்’’என்று பேசினார்.

ad

ad