புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2014

மூதூரில் அகத்தியர் கோவில் அமைக்க பிக்குகள் தடை 
திருகோணமலை மூதூர் கங்குவேலி தமிழ் கிராமத்தில் அகத்தியர் கோயில் அமைப்பு பணிகள் பௌத்த பிக்குகளினால் நிறுத்தப்பட்டுள்ளன.


ஏற்கனவே இந்த கிராமத்தில் அகத்திய முனிவரின் கோயிலை அமைப்பதற்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அமைப்பு பணிகளை கிராம மக்கள் முன்னெடுத்தனர்.

எனினும் அந்த இடம் இலங்கை தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு சொந்தமானது என்று கூறி அங்கு அகத்தியர் கோயில் அமைக்கப்படக்கூடாது என்று சிலர் அச்சுறுத்தல் விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் அது தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான காணி அல்ல என்று அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று அகத்தியருக்கான கோயிலை அமைக்கும் பணிகள் நடந்துக்கொண்டிருந்தபோது அங்கு ஒரு பௌத்த பிக்குவும் சிலரும் கம்பு தடிகளுடன் சென்று கோயில் அமைப்பு பணிகளை நிறுத்தியுள்ளனர்.

எனினும பயம் காரணமாக இந்த தகவலை யாரும் வெளியிட முன்வரவில்லை.

பொதுபலசேனா அமைப்பினரே இந்த அச்சுறுத்தலை விடுத்ததாக திருகோணமலை தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad