புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2014


வர்த்தக தடையை ஏற்படுத்தும் முயற்சிகளில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்- ஆங்கில நாளேடு செய்தி 
பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கையுடன் பிரித்தானியா கொண்டிருக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் தடைகளை ஏற்படுத்தக்கோரும் ஆரம்ப பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த தகவலை இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது.
இதன்படி இந்த அமைப்புக்கள், சே நோ டு ஸ்ரீலங்கா( say no to Sri lanka) என்ற எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக செய்தித்தாள் கூறுகிறது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறி, இந்த அமைப்புக்கள் ஏற்கனவே பிரித்தானிய அரசியல்வாதிகள் இலங்கையின் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடாது என்ற அடிப்படையில் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.
இலங்கையை பொறுத்தவரை பிரித்தானியா, அமெரிக்காவை அடுத்து இரண்டாவது பாரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளதது.
அங்கு, தேயிலை, ஆடைகள், பைசிக்கிள்கள், ரப்பர், மாணிக்கக்கல், தங்க ஆபரணங்கள் மற்றும் பழங்கள் போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதற்கிடையில் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு பிரசாரங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஏற்கனவே தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன.
இந்தநிலையில் பிரித்தானியா, இலங்கைக்கு எதிராக வர்த்தக தடையை ஏற்படுத்தினால் அதனை கண்டு வியப்புக் கொள்ள முடியாது என்று ஐக்கிய இராச்சியத்தின் சிங்கள சம்மேளன தலைவர் டக்ளஸ் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கையின் இராஜதந்திரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை காரணமாக விடுதலைப்புலிகள் சார் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பலம் பிரித்தானியாவில் மேலோங்கிவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad