புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2014


பொள்ளாச்சியில் பெண்கள் சென்ற சுற்றலா வாகனத்தை கடத்தி சில்மிஷம்
     பொள்ளாச்சியை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 45 பயணிகள் மட்டும் ஒரு ஆம்னி பேருந்தில் வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் சுற்றுலா வழிபாட்டை முடித்துக்கொண்டு நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு 
இராமேஸ்வரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு 11 மணிக்கு  பேருந்து தம்பிக்கோட்டை பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது முக்கூட்டுசாலையோர உணவு விடுதியில் பேருந்தை நிறுத்தி டிபன் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பயணிகளிடம் வாய் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

 அதில் சில விசமிகள் பெண்கள் மட்டும் இருந்த அந்த பேருந்தை எடுத்துக் கொண்டு ஓட்டத் தொடங்கியுள்ளனர். ஒருவன் ஓட்டிக் கொண்டிருக்கும் போது மற்ற சில விசமிகள் பேருந்தில் இருந்த பெண்களிடம் அத்துமீறியுள்ளனர். இதில் சில பெண்களுக்கு கீறல் போன்ற காயங்கள் ஏற்பட்டுள்ளது. சில பெண்களின் உடைகள் கிழிக்கப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தவனும் சிலிமிசத்தில் ஈடுபட நினைக்கும் போது வாகனம் அவன் கட்டுப்பாட்டை இழந்து தாமரங்கோட்டை சாலையோரத்தில் ஒரு மரத்தில் மோதி நின்றது.
இந்த நிலையில் மேலும் வாய் தகராறு முற்றியதில் வாகனத்தின் எஞ்சிய கண்ணாடிகளை கட்டைகளால் தாக்கி நொறுக்கியுள்ளனர். இதில் பேருந்தின் கண்ணாடிகள் பலத்த சேதமடைந்துள்ளது.
  தகவலறிந்த பட்டுக்கோட்டை  டிஎஸ்பி செல்லபாண்டியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றி பயணிகளை  மீட்டு மற்றொரு வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர். 
    அதிராம்பட்டினம் இது குறித்து போலீசார் பெண்களை சில்மிஷனம் செய்ததாகவோ, வாகனத்தை கடத்தியதாகவோ  வழக்கு பதிவு செய்யாமல் வாகனத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து   தப்பியோடிய நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள். சேதமடைந்த ஆம்னி பேருந்து அதிரை காவல் நிலையம் முன்பாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


    பெண் ஆட்சி செய்யும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என்றனர் சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள்.

ad

ad