புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2014


அளுத்கமையில் செய்தியாளர் ஒருவர் பணயம் வைக்கப்பட்டு விடுதலை
இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் அளுத்கம, மத்துகமவில் வைத்து குழு ஒன்றினால் பணயக் கைதியாக பிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த செய்தியாளரின் வாகனத்துடன் சாரதியும் தாக்கப்பட்டார்.
பினோய் சூரியாராச்சி என்ற செய்தியாளரும் இரண்டு பெண் செய்தியாளர்களும் அளுத்கமையின் நிலவரம் தொடர்பில் செய்தி சேகரிப்புக்காக அங்கு சென்றிருந்தனர்.
இதன்போது அங்கு பொல்லு மற்றும் தாக்குதல் ஆயுதங்களுடன் அவர்களை சூழ்ந்த பிரதேசவாசிகள் சூரியாராச்சியை பணயம் வைத்தனர்.
இந்தநிலையில், பெண் செய்தியாளர் ஒருவர் தாக்குதல் நடத்த வந்தவர்களிடம் பேசி சூரியாராச்சியை விடுவித்த பின்னர் மூன்று செய்தியாளர்களும் கொழும்பு திரும்பினர்.
அவர்களின் தகவல்படி இன்னமும் அளுத்தமையில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad