களத்தில் ரொனால்டோ: காயத்தில் இருந்து விடுதலை

கால்முட்டி காயம் மற்றும் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டதால் உலகக்கிண்ண போட்டியில் ரொனால்டோ பங்கேற்பாரா என்ற கேள்வியில் ரசிகர்கள் இருந்தனர்.
இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான நட்புரீதியான பயிற்சி ஆட்டத்தில் போர்த்துக்கல் மோதியது. இதில் பாதியில் களமிறங்கிய ரொனால்டோ வழக்கம் போல் உற்சாகத்துடன் விளையாடினார்.
மேலும் இந்தப் போட்டியில் அவர் கோல் போடவும் சிறப்பாக உதவினார். இதன் மூலம் போர்த்துக்கல் அணி 5–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மேலும் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஜேர்மனிக்கு எதிராக திங்கட்கிழமை நடக்கும் தங்களது முதல் ஆட்டத்தில் அவர் களம் காணுவது உறுதியாகி விட்டது.
காயத்தால் அவதிப்பட்டு வந்த போர்த்துக்கல் கால்பந்து அணியின் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓரளவு குணமாகிவிட்டார் என்று தெரியவந்துள்ளது.