புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2014

மலைவாழ் மக்களின் கோவிலில் நடக்கவிருந்த ஒன்பது.இளவயது திருமணங்கள் நிறுத்தம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகிலுள்ள தொட்டமஞ்சி மலை கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்

திருவிழா நடக்கும் போது மட்டுமே, இந்த ஊரை சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது வழக்கம்.

படிப்பறிவும், போதிய விழிப்புணர்வும் இல்லாத, மலைவாழ் மக்கள் குழந்தைகளுக்கான திருமண வயதைப் பற்றி கவலைப்படாமல், ஆண்டுதோறும் நடக்கும் கோவில் திருவிழாவின் போது தங்கள் ஊரிலுள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு திருமணங்களை நடத்தி வந்தனர்.


இந்த ஆண்டும், மாரியம்மன் கோவில் திருவிழாவில், தொட்டமஞ்சு கிராமத்திலுள்ள பல சிறுவர்களுக்கு இளம்வயதில் திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடுகள் நடந்துகொடிருப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் இராஜேஸ்க்கு தகவல் வந்தது.


இதனையடுத்து,  மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் உமாமகேஸ்வரி, தேன்கனிக்கோட்டை தாசில்தார் மாதேஸ்வரி தலமையில் வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் அடங்கிய ஒரு குழுவினர், நேற்று காலை தொட்டமஞ்சி மாரியம்மன் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.


அப்போது, அங்கு, 13 ஜோடிகள் திருமணத்துக்கு, ஆயத்தமாகி கொண்டிருந்தனர். அவர்களிடம் வயது குறித்து, அதிகாரிகள் விசாரித்த போது, அதில், நான்கு ஜோடிகளுக்கு மட்டுமே திருமணம் செய்து கொள்வதற்கான உரிய வயதை எட்டியுள்ளதும், ஒன்பது ஜோடிகளுக்கு திருமணம் செய்யும் வயதை அடையவில்லை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, ஒன்பது ஜோடிகளின் திருமணத்தை  அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.


மேலும், மணமக்களின் பெற்றோர்களை, சந்தித்த அதிகாரிகள் திருமண வயதை எட்டாத குழந்தைகளுக்கு, திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்றும், இதனை மீறி திருமணத்தை நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் எச்சரித்தனர். இச்சம்பவம் தொடாபாக நேற்று தொட்டமஞ்சி மலைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ad

ad