புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2014


ஸ்கைப் மற்றும் ஜீ.பி.எஸ் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாட்சியங்கள் திரட்டப்படும்: பிரதீபா மஹாநாமஹேவா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட இலங்கை தொடர்பிலான விசாரணைக் குழுவினர் அடுத்த மாதம் முதல் வாரமளவில் சாட்சியங்களை திரட்டும்
பணிகளை ஆரம்பிக்க உள்ளனர் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.
லண்டன், ரொறன்டோ மற்றும் ஒஸ்லோ ஆகிய நகரங்களில் சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாக பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ளவர்களிடமிருந்து நவீன தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தி சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்கைப் மற்றும் ஜீ.பி.எஸ் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போதும் நாட்டை விட்டு வெளியேறி குறித்த நாடுகளில் தங்கியிருந்தவர்கள், சாட்சியமளிக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு எட்டு மாதங்களுக்கு விசாரணை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை அறிக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டால், இலங்கையிலிருந்து நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி அளிக்கப்படும் சாட்சியங்கள் பற்றிய விபரங்கள் உதவிக்குப் பெற்றுக்கொள்ளப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

ad

ad