சென்னையில் பெண்ணை கட்டிப்போட்டு கொலை செய்து கொள்ளை: பெண் வேடமிட்டு மர்ம நபர்கள் துணிகரம்
இதனை நம்பி அவர் மர்ம நபர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மெகருன்னிசாவை கட்டிப்போட்டு கொலை செய்த நபர்கள், வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூபாய் 2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
வீடு திரும்பிய சையது அலி, சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர் கொடுத்த தகவலின் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
சென்னையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.