28 ஜூலை, 2014


 28 வருடங்களுக்கு பிறகு வைரமுத்து பாடலை இளையராஜா பாடுகிறார்

இளையராஜா, வைரமுத்து கூட்டணியில் ஏராளமான இனிய பாடல்களை இருவரும் தந்தார்கள்.
வைரமுத்து எழு
திய பல பாடல்களை இளையராஜாவே பாடியும் இருந்தார். ‘புன்னகை மன்னன்’ படத்துக்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். தற்போது சீனுராமசாமி இயக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் வைரமுத்து எழுதிய பாடல்களை இளையராஜா பாடுவதாக அப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி அறிவித்து உள்ளார்.


அவர் கூறும்போது, 28 வருடத்துக்கு பிறகு எனது படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை பாட இளையராஜா ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பாடல் பதிவு விரைவில் நடக்க உள்ளது என்றார். ஆனால் இளையராஜா தரப்பில் கேட்டபோது அவர் பாடுவதாக உறுதிபடுத் தவில்லை.