புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூலை, 2014


நடிகர் விஜய்யின் பள்ளி சான்றிதழ் :
எஸ்.ஏ.சந்திரசேகரன் சொல்லும் தகவல்
 
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை தவ்ஹீத் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

இப்தார் நிகழ்ச்சியில் பள்ளிவாசல் தலைவர் ஜமால் முகைதீன், செயலாளர் ராஜாமுகமது ஆகியோர் வரவேற்று குரானை வழங்கினர். அப்போது அவர் பேசியபோது,  ’’நான் உங்களது உறவினராக இங்கு வந்து கலந்து கொண்டுள்ளேன். இஸ்லாமியத்தில் எனக்கு பிடித்தது 5 முறை தொழுகை செய்வதுதான். எனது முதல் படமான 'அவள் ஒரு பச்சைக்குழந்தை' என்ற படத்திற்கு 1978–ம் ஆண்டே ஒரு இஸ்லாமிய சகோதரர்தான் ரூ.1 லட்சம் பணம் கொடுத்து உதவினார். அன்று கொடுத்த 1 லட்சம் பணம் தற்போது ரூ.10 கோடிக்கு சமமாகும். 

விஜய்யை பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்த்தபோது சான்றிதழில் மதம் என்ற இடத்தில் இந்தியன் என்று குறிப்பிட்டேன். தற்போதும் விஜய் சான்றிதழில் இந்தியன் என்றுதான் இருக்கும். தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில், குறிப்பாக 6 மாவட்டங்களில் இஸ்லாமிய சகோதரர்கள் தான் விஜய் ரசிகர் மன்ற தலைவராக உள்ளனர்’’என்று தெரிவித்தார்.

ad

ad