28 ஜூலை, 2014நித்தியானந்தாவுக்கு
 ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்

நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பித்து கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் கர்நாடக மாநிலம் உயர்நீதிமன்றம் 2 வாரங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. 

மேலும் அவர் மீதான வழக்குகளை விசாரிக்க பிறப்பிக்கப்பட்டிருந்த  தடையையும் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜர் ஆகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு, விசாரணைக்கு வந்த போது நித்தியானந்தா ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 6-ம் தேதி அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தி, 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.