புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2014

சட்டத்தரணிகள் ஊடாக சரத் என் சில்வாவுக்கு தூது விடும் ஆளும் தரப்பு
சிரேஸ்ட சட்டத்தரணிகளின் ஊடாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு ஆளும் கட்சி தூது அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக போட்டியிட்டால் வழக்குத் தொடரப் போவதாக சரத் என் சில்வா அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தொடர்பில் ஆளும் கட்சிக்கு ஆதரவான சிரேஸ்ட சட்டத்தரணிகள், சரத் என் சில்வாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த விடயம் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாக குறித்த சட்டத்தரணிகள் குழுவின் உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தரணிகள் குழுவில் கொழும்பு சட்ட பீட பேராசிரியர்கள் சிலரும் உள்ளடங்குகின்றனர்.
18ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதனால், மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியாது என சரத் என் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே இனி வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென மற்றுமொரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ad

ad