இலங்கை பயணத்தின் போது குண்டு துளைக்காத கார் வேண்டாம்; பாப்பரசர் கோரிக்கை
இலங்கைக்கு வருகை தரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குண்டு துளைக்காத காரில் பயணிக்க விருப்பமில்லை எ தெரிவித்ததாக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். புனித பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை வருகையை உத்தியோகபூர்வமாக
அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாப்பரசர் பிரான்சிஸ் வரும் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 3 நாள் பயணமாக இலங்கை வரும் பாப்பரசர் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். அத்துடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்திக்கவுள்ளளார். இந்நிலையில் அவரின் வருகை தொடர்பான ஏற்பாடுகள் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுவிட்டடது. இந்நிலையில் முன்னர் இலங்கைக்கு வருகை தந்த பரிசுத்த பாப்பரசர் இரண்டாம் ஜோன் போலின் பயணத்துக்கு குண்டு துளைக்காத கார் வழங்கப்பட்டது. இதேபோன்று தங்போது இலங்கை வருகைதரவுள்ள பாப்பரசர் பிரான்சிஸின் பயணத்துக்கும் குண்டு துளைக்காத கார் ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் இந்தக் காரை ஏற்க பாப்பரசர் மறுத்து விட்டார் என்றும் அவர் மக்களுக்கு அருகிலேயே இருக்க விரும்புகிறார் எனவும் கூறினார் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்