தம்புள்ளை பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்
தம்புள்ளை
ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் மீது இனந்தெரியாதோரால் இன்று பெற்றோல் குண்டுத்
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பள்ளியின் நிர்வாக சபை உறுப்பினர்
ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 12:40 மணியளவில் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிவாசலில் மிம்பர் அமைந்துள்ள இடத்தின் பின் பக்கத்தில் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் பெற்றோல் நிரப்பிய போத்தல் உள்ளிட்ட சில பொருட்கள் காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் பள்ளிவாசலுக்கு வருகை தந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் அவ்வுறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.