புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2014

ஐ.எஸ்.ஐ. உளவாளி கைது எதிரொலி : தென் மாநிலங்களில் உஷார்

கிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு  உளவாளியாக செயல்பட்டதாக சென்னையில் இலங்கைத் தமிழரான  அருண் செல்வராசன் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.  இதுவரை கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து தென் இந்தியாவில் உள்ள  பல்வேறு முக்கிய பகுதிகளில், குறிப்பாக ராணுவம் மற்றும் வெளிநாட்டு  தூதரகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு  பணிகள் தீவிரபடுத்தப் பட்டுள்ளன. பாகிஸ்தான் உளவு அமைப்பான  ஐ.எஸ்.ஐ.க்கு, தமிழகம் மற்றும் தென்னிந்தியா குறித்து பல்வேறு  தகவல்களை அளித்து வந்த இலங்கைத் தமிழரான அருண் செல்வராசன்  10ம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டார். 

மத்திய பாதுகாப்பு  அமைப்புகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு  அமைப்பினர் அருணை கைது செய்தனர். அவரிடம் இருந்து பல்வேறு  ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தென் இந்தியாவில் உள்ள  பல்வேறு ராணுவ அமைவிடங்கள், குறிப்பாக கடலோரக் காவல்  படையின் அலுவலகங்கள், அது செயல்படும் இடங்கள் ஆகியவை  குறித்த விவரங்கள், வரைபடங்கள் மீட்கப்பட்டன. பல்வேறு வெளிநாட்டு  தூதரகங்கள் அமைந்துள்ள இடங்கள் குறித்த வரைபடங்களும்,  தகவல்களும் மீட்கப்பட்டன. முதல்கட்ட விசாரணையில், விடுதலைப்  புலிகள் அமைப்புக்கு உதவியதாக இலங்கையாலும் அருண் தேடப்பட்டு  வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. தென் இந்தியா குறித்த  தகவல்களை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில்  பணியாற்றும் அமீர் ஜூபைர் சித்திகியிடம் கொடுத்ததாக அருண்  தெரிவித்தார். இதனிடையில் பணி காலம் முடிந்ததால் சித்திகி  பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டதாக பாகிஸ்தான் தூதரகம்  தெரிவித்துள்ளது.

கடந்த 2012-13ம் ஆண்டுகளில் திருச்சியில் இருந்து கொழும்புவுக்கு  தொடர்ந்து பயணம் மேற்கொண்ட தமீம அன்சாரி என்பவரை புலனாய்வு  அமைப்பினர் கண்காணித்தனர். அவருக்கு சித்திகியுடன் தொடர்பு  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமீம அன்சாரி கைது  செய்யப்பட்டார். அதைத் தவிர ஷாஜி என்பவரது பெயரையும் அருண்  கூறியுள்ளார்.

 தான் தொடங்கிய தொழில்களில் நஷ்டம் ஏற்பட்டபோது,  ஷாஜி தனக்கு உதவியாக வும், அதைத் தொடர்ந்து நிகழ்ச்சிகளை  நடத்தித் தரும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை தொடங்க பணம்  கொடுத்ததாகவும் அருண் கூறினார். அவ்வாறு தனது நிறுவனத்தின் மூலம் கடலோரக் காவல்படை நடத்திய  ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்துள்ளார் அருண். அப்போது கடலோரக்  காவல்படை குறித்த தகவல்களை திரட்டி ஷாஜிக்கு கொடுத்துள்ளார்.  மத்திய புலனாய்வு அமைப்பு, தேசிய புல னாய்வு அமைப்பு உள்ளிட்ட  அமைப்புகள், மாநில போலீசாருடன் இணைந்து தென் இந்தியாவில்  பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். குறிப்பாக  ராணுவ அமைவிடங்கள், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் முக்கிய  பகுதிக ளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.


அருண் செல்வராசனை தவிர வேறு சிலரும் இதுபோன்று உளவாளியாக  செயல்படுகின்றனரா என்பது குறித்தும் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர  விசாரணையில் ஈடுபட்டுள்ளன. இதனிடையில் அருண் செல்வராசனை  காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை நீதிமன்றத்தில்  இன்று மனு தாக்கல் செய்கிறது தேசிய புலனாய்வு அமைப்பு. அனுமதி  கிடைத்ததும் விசாரணையில் மேலும் பல்வேறு தகவல்கள் கிடைக்கலாம்  என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ad

ad