புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2014

சர்வதேச ஜனநாயக தினம் இன்றாகும்!- கூட்டமைப்பைக் கேலி செய்து சுவரொட்டி
சர்வதேச ஜனநாயக தினம் இன்றாகும். ஜனநாயக கோட்பாடுகளை ஊக்குவிப்பதனையும் அதனை நிலைநிறுத்துவதையும்
நோக்காகக் கொண்டு 2007 ஆம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையினால் இன்றைய தினத்தை சர்வதேச ஜனநாயக தினமாக பிரகடனம் செய்யப்பட்டது.
ஜனநாயகத்தில் இளையோரை ஈடுபடுத்துதல் என்பதே இம்முறை சர்வதேச ஜனநாயக தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ரீதியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்குவதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் எதிர்கொள்ளப்பட்ட சவால்களுக்கு தீர்வை பெறுவதற்கு தம்மால் என்ன செய்ய முடியும் என்பதை இளையோர் சிந்திக்க வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
விதியை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்குமாறு உங்கள் கனவுகளை அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்துக் கொள்ளுமாறும் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
மக்களிடையே ஜனநாயகம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கும் பொருத்தமான முறையில் இந்த தினத்தை அனுஷ்டிக்குமாறும் உறுப்பு நாடுகள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு ஐ.நா அழைப்பு விடுப்பதும் இந்த தினத்தின் நோக்கமாகும்.
இந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் 192 உறுப்பு நாடுகள் அங்கீகரித்துள்ளன.
இதேவேளை ஜனநாயக தினமான இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கேலி செய்து அன்று இன்று ஜனநாயகம் என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கூட்டமைப்பின் தலைவா இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை கேலி செய்து, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அன்றைய ஜனநாயகம் - இன்றைய ஜனநாயகம் என பிரசுரிக்கப்பட்டு இரண்டு விதமான கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.
அதன் கீழ் மேற்படி மூன்று அரசியல்வாதிகளும் செல்வ செழிப்புடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டு அவர்களின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

ad

ad